TNPSC Reforms: அடுத்தடுத்து அப்டேட்டை அள்ளிக் குவிக்கும் டிஎன்பிஎஸ்சி: போட்டித்தேர்வு கலந்தாய்வுக்கு இத்தனை நாள்தானா?
அந்த வகையில் நேர்காணலை முடித்து, கலந்தாய்வுக்கு டிஎன்பிஎஸ்சி எடுத்துக்கொண்ட நாட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டு போட்டித் தேர்வுகள் அறிவிக்கை, தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு முடிவுகள், நேர்காணல், கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு எடுத்துக்கொண்ட நாட்களை, தேர்வு வாரியாக வெளியிட்டு வருகிறது. அதேபோல தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியீடு, நேர்காணல் முடிவுகள் வெளியீடு ஆகியவற்றுக்கு எடுத்துக்கொண்ட கால அளவு எவ்வளவு என்பது குறித்து தேர்வு வாரியாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் நேர்காணலை முடித்து, கலந்தாய்வுக்கு டிஎன்பிஎஸ்சி எடுத்துக்கொண்ட நாட்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
அந்த வகையில் கலந்தாய்வு தொடங்க குறைந்தபட்சம் 4 நாட்கள் முதல் அதிகபட்சம் 15 நாட்கள் வரை ஆகியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எந்தெந்தத் தேர்வுக்கு எத்தனை நாட்கள் ஆகி உள்ளன என்ற பட்டியல், டிஎன்பிஎஸ்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
— TNPSC (@TNPSC_Office) October 26, 2024
இதன்படி குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் மார்ச் 28ஆம் தேதி முடிந்த நிலையில், 15 நாட்களில் ஏப்ரல் 12ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கி உள்ளது. அதேபோல, குரூப் 2 தேர்வுக்கான நேர்காணல் பிப்ரவரி 17ஆம் தேதி முடிந்த நிலையில், நான்கே நாட்களில் பிப். 21ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கி உள்ளது. அதேபோல பிற தேர்வுகளுக்கும் ஒரு வாரத்தில் இருந்து 9 நாட்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
முன்னதாக, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் அல்லாத தேர்வுகளுக்கான கவுன்சிலிங் ஆகியவை 6 முதல் 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இதையும் வாசிக்கலாம்: சபாஷ்: போட்டித் தேர்வுகள், வெற்றிபெற்றோரின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- விவரம்!