மேலும் அறிய

Group 4 Invalid Marks: குரூப் 4 தேர்வில் அறிமுகமான இன்வேலிட் மதிப்பெண் முறை! அப்படி என்றால் என்ன?

தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடக்கும் குரூப் 4 தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. இயங்கி வருகிறது. இவர்கள் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றனர்.

இன்வேலிட் மதிப்பெண் முறை:

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, குரூப் 4 தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

இந்த குரூப் 4 தேர்வு முறையில் புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து அதை அடித்துவிட்டு, பிறகு வேறு ஒரு பதிலை தேர்வு செய்து அதை பதிவிட்டாலும் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட்( மதிப்பெற்றதாக) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

6 ஆயிரம் காலிப்பணியிடங்கள்:

தேர்வு தொடங்கும் முன்பு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையத்திற்கு வரச்சொல்லி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர். இதன்படி, தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்துவிட்டனர்.

6 ஆயிரம் காலிப்பணியிடங்களே உள்ள இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடக்கும் இந்த குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: UPSC முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை?

மேலும் படிக்க: ITI Admission 2024 : தொழிற்பயிற்சி படிக்க ஆசையா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு.. படிக்க தயாரா மாணவர்களே..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
TN Assembly Session LIVE: தேர்தல் தோல்வியை தவிர்க்கவே அதிமுக பேரவையில் அமளி - ரகுபதி
Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராய பாதிப்பு - மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழப்பு; தொடரும் சோகம்
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!
"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் அமைச்சர் " கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
பிரியங்கா காந்திக்காக களத்தில் குதிக்கும் மம்தா.. கச்சிதமாக வேலையை முடித்த சிதம்பரம்!
பிரியங்கா காந்திக்காக களத்தில் குதிக்கும் மம்தா.. கச்சிதமாக வேலையை முடித்த சிதம்பரம்!
Embed widget