மேலும் அறிய

Group 4 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சென்னையில் இலவசப் பயிற்சி : கலந்துகொள்வது எப்படி?

TNPSC Group 4 Exam Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராமக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராமக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்.25) முதல் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். 

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பல்வேறு பயிற்சி மையங்கள் குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சியை வழங்கி வருகின்றன. 

நாளை முதல் வகுப்புகள் தொடக்கம்

அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராமக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்.25) முதல் தொடங்கப்பட உள்ளன.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளதாவது:

சென்னை, அசோக் நகர், அம்பேத்கர் திடலில் இயங்கி வரும் திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 25.02.2024 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC -Gr (IV) & VAO தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ளன.

மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

தொடர்புக்கு

சென்னை: 9042991182 அங்கனூர்: 9843660449 ஜெயங்கொண்டம்: 9865756216 சிதம்பரம் 9894447722

திருப்போரூர் 74491 97728 கடலூர் 9600244839 கும்பகோணம் 7904832410

திருவாரூர்: 8825995117 திருச்செந்தூர்: 8675590803 கள்ளக்குறிச்சி: 9003612449 நாகப்பட்டினம் 9787825382 நெடுங்குளம் 7639091631 புதுகோட்டை 9443903727 குறிஞ்சிப்பாடி 9042991182

மதுராந்தகம் 9566227765 திண்டிவனம் 9043751262 வடலூர் 9942389886

திருச்சி 8508082300 தஞ்சாவூர் 9600792241

மின்னஞ்சல்: thirumapayilagam@gmail.com

இவ்வாறு திருமா பயிலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Embed widget