மேலும் அறிய

TNPSC: இன்டர்வியூ இல்லை; மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

TNPSC Combined Technical Services Exam: இந்தத் தேர்வுக்கு இன்று (ஜூலை 26) முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆக.28 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.

உதவிப் பொறியாளர், வேதியியலாளர், புவியியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு இன்று (ஜூலை 26) முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. பல்வேறு பணியிடங்களுக்கு, குரூப் 1, குரூப் 2, 3, 4 என பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான ஆட்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். 

இந்த நிலையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகள் சார்ந்த தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக, உதவிப் பொறியாளர், வேதியியலாளர், புவியியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியாகி உள்ளது. 

கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு

எனினும் இந்தப் பாடங்களுக்கான தாள்கள் அனைத்தும் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே திருத்தப்படும்.  

ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இந்தத் தேர்வுக்கு இன்று (ஜூலை 26) முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆக.28 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். அக்டோபர் 14 முதல் 23ஆம் தேதி வரை பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 654 பணி இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும், தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.
  • கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். 

தேர்வுக்கான பல்வேறு பாடங்களின் பாடத்திட்டம், எழுத்துத் தேர்வின்போது தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பற்றி அறியவும்  கூடுதல் தகவல்களுக்கும்

அல்லது https://www.tnpsc.gov.in/Document/english/09_2024_CTS_NONOT_ENGLISH_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்தும், காணலாம். 

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/

டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் இலவச தொலைபேசி எண்: 18004190958 (வேலை நாட்களில் 10.00 a.m. முதல் 5.45 p.m வரை).

இ- மெயில் முகவரி: helpdesk@tnpscexams.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
Embed widget