மேலும் அறிய

Guest Lecturer Jobs: அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி- விவரம்

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 27) கடைசித் தேதி ஆகும்.

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 27) கடைசித் தேதி ஆகும். 

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான  பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்பணியிடங்கள் தவிர, மீதி காலியாக உள்ள 1,895 பணியிடங்களுக்கு  தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த காலிப் பணியிடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, அதில் இருந்து கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர். உதவிப் பேராசிரியர் பணி இடத்திற்கான கல்வித் தகுதி பெற்றவர்களும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வர்கள் தங்கள் விண்ணப்பித்தை இணையதளத்தில் பதிவிட வசதியாக http://www.tngasa.in என்ற இணையதளம் டிசம்பர் 15ஆம் தேதி அன்று உயர்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதே நாளில் இருந்து கவுரவ விரிவுரையாளர் பணியில் சேரத் தகுதி பெற்ற தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 27) கடைசித் தேதி ஆகும். 

ஊதியம் என்ன?

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும். 

கல்வித் தகுதி என்ன?

* 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 

* நெட் / ஸ்லெட் அல்லது செட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

அல்லது

* உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஏதேனும் ஒன்றில் பிஎச்.டி. பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 

கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/TNGAS-GL-Instruction%20Tamil%202.0_15.12.2022_11.23AM%20(1).pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

பாடம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களை அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/1895%20Guest%20Lecturer%20Allotment%20District%20Wise.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் விவரங்களுக்கு: http://www.tngasa.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget