மேலும் அறிய

TNCMTSE Exam: ஜூலை 21 முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வு; ஜூன் 11 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

2024-2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு ஜூன் 11 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்‌ மாநிலப்‌ பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ 2023- 2024ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயின்று 2024-2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தின் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’தமிழ்நாட்டில்‌ அரசுப்‌ பள்ளி மாணவ மாணவியர்களின்‌ திறனைக் கண்டறிவதற்கும்‌, அவர்களை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌, 2024- 2025 ஆம்‌ கல்வியாண்டிற்கான "தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வு" 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

"தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு" விண்ணப்பிக்க விரும்பும்‌ தமிழ்நாடு மாநிலப்‌ பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயின்று தற்போது 2024- 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ பதினொன்றாம்‌ வகுப்பினை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் ‌படிவத்தினை 11.06.2024 முதல்‌ 26.06.2024 வரை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என்றும்‌, அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேர்வு கட்டணம்‌ ரூ.50/- (ரூபாய்‌ ஐம்பது மட்டும்‌) சேர்த்து 26.06.2024-ற்குள்‌ மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

எனவே, தங்கள்‌ அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியர்‌ இத்தேர்விற்கு விண்ணப்பித்திட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்கிடவும்‌, தேர்வு தொடர்பான அறிவிப்பினை மாணவர்கள்‌ அறியும்‌ வண்ணம்‌ அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ அறிவிப்புப்‌ பலகையில்‌ ஒட்டவும்‌, அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்திட ஊக்குவித்திடவும்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்க வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை

இத்தேர்வில்‌ 1000 மாணவர்கள் நடைமுறையில்‌ உள்ள இடஒதுக்கீட்டின்‌ அடிப்படையில்‌ (500 மாணவர்கள்‌, 500 மாணவியர்கள்‌) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய்‌ 10,000/-(மாதம்‌ ரூ.1000/- வீதம்‌ ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்‌ ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்‌.

பாடத்திட்டம் என்ன?

தமிழ்நாடு அரசின்‌ 9 மற்றும்‌ 10ஆம்‌ வகுப்புகளில்‌ கணிதம்‌, அறிவியல்‌ மற்றும்‌சமூக அறிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடத்திட்டங்களின்‌ அடிப்படையில்‌கொள்குறி வகையில்‌ தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும்‌. முதல்‌ தாளில்‌ கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. இரண்டாம்‌ தாளில்‌ அறிவியல்‌ மற்றும்‌ சமூகஅறிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. முதல்‌ தாள்‌ காலை 10.00 மணி முதல்‌ 12.00 மணி வரையிலும்‌ இரண்டாம்‌ தாள்‌ பிற்பகல்‌ 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும்‌ நடைபெறும்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பப்‌ படிவத்தினை 11.06.2024 முதல்‌ 26.06.2024 வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம்‌ ரூ.50/- (ரூபாய்‌ ஐம்பது மட்டும்‌) சேர்த்து 26.06.2024-ற்குள்‌ மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
PM Modi; பிரதமர் மோடியை பிரமிக்க வைத்த 3 போர் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பிரதமர் மோடியை பிரமிக்க வைத்த 3 போர் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
Embed widget