TN TRB 2025: முதுகலை ஆசிரியர் தேர்வு: உயர் நீதிமன்றம் அதிரடி! தேர்வர்கள் அதிர்ச்சி?
PG TRB 2025: தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் அக்டோபர் 12ஆம் தேதி உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு
இந்த நிலையில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. இதனால் தேர்வுக்குத் தயாராக போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதிபடத் தெரிவித்தது.
இதையடுத்து தேர்வர்கள், வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜெகதீசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்றம் தள்ளுபடி
இந்த நிலையில், தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்தது. அரசு தரப்பு வாதத்தை ஏற்று, தேர்வை தள்ளிவைக்குமாறு உத்தரவிட முடியாது என்றுகூறி, வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.






















