மேலும் அறிய

TN TRB Exam Restrictions | டிஆர்பி தேர்வில் பெல்ட், நகை, ஹை-ஹீல்ஸ் அணிய தடை.. இன்னொரு சர்ச்சை..

TN TRB Exam 2022 Restrictions தேர்வர்கள் நகைகளை அணியக்கூடாது. பெல்ட் அணிய அனுமதியில்லை. மேலும் ஹைஹீல்ஸ் செருப்புகளுக்கும் அனுமதி இல்லை.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், நகை, பெல்ட் அணியக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பல்வேறு பாடங்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) , கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) நியமிக்கப்பட உள்ளனர். 1,960 காலிப் பணியிடங்களுடன் ஏற்கெனவே காலியாக இருந்த 247 இடங்களுடன் சேர்த்து, 2,207 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 40 வயதைத் தாண்டிய பொதுப்பிரிவினரும், 45 வயது தாண்டிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரும் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்சி- அருந்ததியர், எஸ்டி) முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. வயது வரம்பு கட்டுப்பாடு கடந்த அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. அப்போது, ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில் ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்ட, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்கு இது பொருந்தும்.

2022-ம் ஆண்டு வரை

இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 20 வரை தேர்வுகள் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று தேர்வுகள் நடைபெறாது. 3 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வு 2 ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் தேர்வுகள் தொடங்கும்.  

இந்நிலையில் தேர்வு எழுத வருவோருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் தேர்வர்களின் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* தேர்வர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் கட்டாயம். ஒரு தவணை தடுப்பூசி போட்டோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் காலக்கெடு முடிந்திருக்கக் கூடாது. 

* தடுப்பூசி போடாதோர் தேர்வு நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும். 

* இதற்காகத் தேர்வர்கள் 1.30 மணி நேரம் முன்னதாக அதாவது முதல் ஷிஃப்டுக்கு 7.30 மணிக்கும், 2-வது ஷிஃப்டுக்கு 12.30 மணிக்கும் வர வேண்டியது அவசியம். 

* தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் புகைப்படத்தைக் கொண்டு வர வேண்டும். அத்துடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகிய அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும். 

TN TRB Exam Restrictions | டிஆர்பி தேர்வில் பெல்ட், நகை, ஹை-ஹீல்ஸ் அணிய தடை.. இன்னொரு சர்ச்சை..

* தேர்வர்கள் நகைகளை அணியக்கூடாது. 

* பெல்ட் அணிந்திருக்க அனுமதியில்லை. மேலும் ஹைஹீல்ஸ் செருப்புகளுக்கும் அனுமதி இல்லை. சாதாரண செருப்புகளை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்.

* கால்குலேட்டர்கள், கணித வாய்ப்பாடுகள், டிஜிட்டல் டயரிகள் மற்றும் புத்தகங்களும் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. 

* தேர்வர்களுக்கு பேப்பர், பேனா மற்றும் பென்சில் ஆகியவை தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும். தேர்வு முடிந்து வெளியே வரும்போது தாங்கள் பெற்ற பேப்பரை மீண்டும் தேர்வு அலுவலரிடமே ஒப்படைத்துவிட வேண்டும்.

* ஹால் டிக்கெட்டைத் தேர்வு மையத்தில் உள்ள தேர்வு அலுவலர் பெற்றுக்கொள்வார். ஆகவே ஹால் டிக்கெட் நகலைத் தங்களிடம் ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

* அதேபோல மொபைல் போன்களுக்கு அனுமதியில்லை. கால்குலேட்டர்கள், கணித வாய்ப்பாடுகள், டிஜிட்டல் டயரிகள் மற்றும் புத்தகங்களுக்குத் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. 

* தேர்வு மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பர். 

* தேர்வு மையத்தில் தடையில்லாத மின்சார வசதி, போதிய போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

* முறைகேட்டைத் தடுக்க, அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனையில் ஈடுபடுவர்.

நீட் தேர்வின்போது நகை, பெல்ட் அணியக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு சர்ச்சை எழுந்தது. அதேபோலத் தற்போது டிஆர்பி தேர்வு கட்டுப்பாடுகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget