TN School Teachers Guide: ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி கையேடு: என்னென்ன சிறப்பம்சங்கள்?
40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில், 291 பக்க அளவில் தலைமை ஆசிரியர் கையேடு பள்ளிக் கல்வி இயக்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி கையேட்டை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று மதுரையில் வெளியிட்டார். அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.
மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தலைமை பண்புகள் மற்றும் வழிகாட்டி பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அளிக்கப்பட்டு வருகின்றன.
40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில்
குறிப்பாக தமிழக அரசு சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவ பகிர்வைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொகுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு கையேட்டினை தயாரிக்க ஆணையிட்டு இருந்தார்.
இதன் அடிப்படையில் 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில், 291 பக்க அளவில் தலைமை ஆசிரியர் கையேடு பள்ளிக் கல்வி இயக்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி கையேட்டை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று மதுரையில் வெளியிட்டார். இதனை பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணை இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதையும் வாசிக்கலாம்: MBBS Counselling: தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு; மாநில அரசே நடத்தும்- தேதிகள் அறிவிப்பு
கையேட்டில் உள்ளது என்ன?
இக்கையேட்டில் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் பணிகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமாக உள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள், பட்டதாரி, இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அலுவலக நடைமுறை பகுதியில் அலுவலகப் பணியாளர்களின் பணிகளும் கடமைகளும் பொறுப்புகளும் நிதி சார்ந்த நடைமுறை தகவல்களும் தரப்பட்டுள்ளன.
முதுகலை, இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களும் விரிவாக எடுத்து உரைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றம், இலக்கிய மன்றம், நூலக மன்றம், வானவில் மன்றம் உள்ளிட்ட பல வகையான கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களும் தரப்பட்டுள்ளன.
கையேட்டை முழுமையாகக் காண
இதையும் வாசிக்கலாம்: Teachers App:ஆசிரியர்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க புது செயலி: அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில