Quarterly Exams: காலாண்டுத் தேர்வு தேதிகள் வெளியீடு! 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விடுமுறை எப்போது?
TN Quarterly exams time table 2025: 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10அம் தேதி முதல் 25ஆம் வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு அட்டவணை
இதன்படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10அம் தேதி முதல் 25ஆம் வரை நடைபெற உள்ளது. அதேபோல, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை ஒரு வார காலத்துக்கு அறிவிக்கப்பட உள்ளன.
அரையாண்டுத் தேர்வு எப்போது?
ஏற்கெனவே வெளியான பள்ளிக் கல்வித்துறை ஆண்டு அட்டவணையின்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 15ஆம் தேதியான திங்கள் கிழமை ( 15.12.2025) தொடங்குகிறது. இந்த தேர்வுகள் ஒரு வார காலத்திற்கு நடக்கின்றன. பின்னர், அதே டிசம்பர் மாதம் 23ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் முடிகின்றன.
பின்னர், டிசம்பர் மாதம் 24ம் தேதி அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை தொடங்குகிறது. அவ்வாறு தொடங்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை புத்தாண்டு வரை இருக்கும்.

பொதுத் தேர்வுகள் எப்போது?
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






















