மேலும் அறிய

SC ST Govt Job: தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாத 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள்; விவரம்

தமிழக அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

தமிழக அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதை முன்னிட்டு 2021- 22ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் தேர்வு முகாம்கள் மூலம்  நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 

எந்தத் துறையில் எவ்வளவு இடங்கள்?

தமிழக அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் (Backlog Vacancies) நிரப்பப்படாமல் உள்ளன. இதில் எஸ்சி காலிப் பணியிடங்கள் 8,173 ஆகவும், எஸ்டி பணியிடங்கள் 2,229 ஆகவும் உள்ளன.

இதில் தமிழக அரசின் உள், மதுவிலக்கு (மற்றும்) ஆயத்தீர்வை துறையில்தான் அதிக அளவிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக, 7,090 பணியிடங்கள் இந்தத் துறையில் காலியாக உள்ளன. இதில் 6,861 எஸ்சி காலிப் பணியிடங்களும் 229 எஸ்டி காலிப் பணியிடங்களும் அடக்கம். 

அதற்கு அடுத்தபடியாக பள்ளிக் கல்வித்துறையில் 695 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை 446 எஸ்சி பணியிடங்கள் மற்றும் 249 எஸ்டி பணியிடங்களை உள்ளடக்கியதாகும். இதைத் தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 478 பின்னடைவுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில்   எஸ்டி பணியிடங்களே அதிக அளவில் காலியாக உள்ளது. இதில் 173 எஸ்சி பணியிடங்களும் 305  எஸ்டி பணியிடங்களும் அடக்கம். இறுதியாக எரிசக்தி துறையில் 272 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 44 எஸ்சி பணியிடங்களும் 228 எஸ்டி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது.  இதில் ஆட்சேர்ப்புப் பணிகளை விரைவுபடுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


SC ST Govt Job: தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாத 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள்; விவரம்

கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!

இதற்கிடையே தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கப்பட்டு, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள் தேர்வு மூலம்  நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, ’’தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் தேர்வு மூலம்  நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு  ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது  வருத்தமளிக்கிறது!

அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 10,402 பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கும்  மேலாக நிரப்பப்படவில்லை. தேவையற்ற இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!

பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையில் இருந்தும், சமூக பின்னடைவில் இருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது சமூக அநீதி!

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள் தேர்வு மூலம்  நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget