(Source: ECI/ABP News/ABP Majha)
12th Exam: பிளஸ் 2 பொதுத் தேர்வு; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட்; முறைகேடு செய்த 2 பேர்!
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாத நிலையில், 2 தேர்வர்கள் முறைகேடு செய்ததாக அரசுத் தேர்வர்கள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாத நிலையில், 2 தேர்வர்கள் முறைகேடு செய்ததாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள் 23,747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக இருந்தது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
3,225 தேர்வு மையங்கள்
மாணவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கியது. 10 மணி முதல் 10.10 வரை வினாத் தாளை வாசிக்க நேரம் அளிக்கப்பட்டது. 10.10 முதல் 10.15 வரை தேர்வரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அதை அடுத்து 10.15 முதல் 01.15 வரை 3 மணி நேரங்களுக்குத் தேர்வு நடைபெற்ற. மாணவர்கள் சீருடை அணிந்து உரிய நேரத்துக்குத் தேர்வு மையத்துக்குச் சென்றனர்.
தேர்வு அட்டவணை
முதல் நாளான இன்று மொழித்தாள் தேர்வு நடைபெற்றது. பின்,
மார்ச் 15ஆம் தேதி ஆங்கிலம்,
மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி
மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் என அந்தந்தப் பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
தேர்வு அறையில் செல்போன் கொண்டு செல்வது, ஆள்மாறாட்டம், துண்டுதாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, விடைத்தாள் மாற்றிக்கொள்வது உள்ளிட்ட செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இந்த செயல்களை ஊக்கப்படுத்த நினைத்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகங்களுக்கு
தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட 2 மாணவர்கள்
அதேபோல வேலூர் மாவட்டத்தில் 2 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.