TN 10th Result: வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; பார்ப்பது எப்படி?
TN 10th Revaluation Retotalling Result 2023: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அன்று, இந்த தேர்வு முடிவுகள் தேதி 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில் 8,35, 614 பேர் தேர்ச்சியடைந்தனர். சுமார் 78,706 பேர் தோல்வியடைந்தனர்.
இதனைத் தொடந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் மே 26 ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் பெற்றுக் கொண்டனர். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
மறுகூட்டல் முடிவுகள்
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதற்கான முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. பொதுத் தேர்வுகள் எழுதி, மறு கூட்டல் (Re- total) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக Notification பகுதியில் இன்று 22.06.2023 (வியாழக் கிழமை) பிற்பகல் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.
மறு கூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் மாற்றம் கொண்ட தேர்வர்களின் பட்டியலைக் காண https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1687416966.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.