மேலும் அறிய

TN 10th Result 2024: தேனி, திண்டுக்கல் 10ம் வகுப்பு தேர்வு முடிவு; எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் - முழு விவரம் இதோ

Theni Dindigul 10th Result 2024: தேனி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் மொத்தம் 92.63 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி. திண்டுக்கல்லில் மொத்தம் 92.32 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91.55% பேர் தேர்ச்சி - மாணவிகளே அதிகம்

TN 10th Result 2024: தேனி, திண்டுக்கல் 10ம் வகுப்பு தேர்வு முடிவு; எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் - முழு விவரம் இதோ

தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

தேனி மாவட்டத்தில் 92.63% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 7113 மாணவர்களும், 7113 மாணவிகள் என மொத்தம் 14225 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில்  6400 ஆண் மாணவர்களும், 6777 பெண் மாணவர்களும் என மொத்தம் 13177 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 88.99 சதவீதம் மாணவர்களும், 95.29 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.63 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TN 10th Result 2024: தேனி, திண்டுக்கல் 10ம் வகுப்பு தேர்வு முடிவு; எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் - முழு விவரம் இதோ

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்வு எழுதிய 24665 பேரில், 10818  மாணவர்களும், 11952  மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 89.42 சதவீதம் மாணவர்களும், 95.11 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.32 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

  •  தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in  அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.
  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget