மேலும் அறிய
Advertisement
ஆசிரியர் தினத்தை கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடிய பழைய மாணவர்கள்
ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடினர்
நாட்றம்பள்ளி அருகே ஆசிரியர் தினத்தை கோலாகலமாக கொண்டாடிய பள்ளி மேலாண்மை குழு மற்றும் பழைய மாணவர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பழைய மாணவர்கள் சார்பில் அப்பள்ளியில் பணிப்புரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை புதுப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து மேளதாளத்துடன், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் உட்பட நாட்டுப்புற கலைகள் மூலம் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று பள்ளி வளாகம் முன்பு மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியில் கடந்த ஆண்டு பணிரண்டாம் வகுப்பில் 100க்கு 100மதிப்பெண் பெற்ற 6 மாணவர்களையும்,13 மாணவர்கள் 100க்கு 99 மதிப்பெண் பெற்ற மாணவர்களையும்.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து திருப்பத்தூர் மாதிரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று தற்போது ஜே ஜே இ தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வரும் மாணவர், மோகன் குமார், கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயின்று வரும் மாணவர் விஜயராஜேந்திரன் மற்றும் இப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியரும் 2014 ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற நீலகண்டன் ஆகியோருக்கு இந்த ஆசிரியர் தினத்தில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகிஅன்பழகன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் சங்கத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion