மேலும் அறிய

தமிழ்நாட்டில் 100% கல்வியறிவு  பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்வரின் இலக்கு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் 100 சதவீத மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் பி.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில எச்.டி.எப்.சி. வங்கியின் பரிவர்தன் திட்ட மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் தலைமை உரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
”முக்கியமான ஒரு நிகழ்வில் சில கருத்துக்களை மற்றும் பதிவு செய்து இந்த  நிதி உதவி எல்லாம் வழங்கி இந்த விழாவை நிறைவேற்றலாம் என்று நினைக்கிறேன். முதல் கருத்து இங்கே வங்கி மூத்த நிர்வாகி சொன்னார் நான் இங்கே தமிழில் உரையாற்றி என்னுடைய தமிழை சிறப்பித்துக் கொள்கிறேன் என்று அதற்கு நான் பாராட்டுகிறேன். எனினும் பேரறிஞர் அண்ணா சொன்னது போல் நம்முடைய கல்வி கொள்கை இரட்டை மொழி கற்பித்தல் ஏனென்றால் இன்றைக்கு அந்த கொள்கையை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை.

ஆங்கில புலமை:

உலகமயமாக ஆகிவிட்டது பொருளாதாரம். அந்த ஒரு பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு ஆங்கிலம் ஒரு திறனாக புலமையாக இருக்கிறதோ உங்கள் வளர்ச்சிக்கும் உங்களுடைய பணிக்கும் உங்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கும் சிறப்பாக இருக்கும். எனவே நானும் இல்லை வங்கி தலைவரோ தினப்படி எங்களுடைய பணியில் ஆங்கிலத்தில் பணியாற்ற இருக்கிற கடமையை தாண்டி இன்றைக்கு இங்கே தமிழில் உரையாடுவது எங்களுக்கு பெருமை. எங்களுக்கு வாய்ப்பு என்று கருதுகிறோமோ நீங்கள் எல்லாம் உங்களுடைய பணிக்காக உங்களுடைய எதிர்காலத்துக்காக ஆங்கிலத்தையும்  கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

தமிழ்நாட்டில் 100% கல்வியறிவு  பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்வரின் இலக்கு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கல்வியின் முக்கியத்துவம்:

இங்கே மேயர் பேசும் போது கல்வியினுடைய முக்கியத்துவத்தையும் அதை என்றைக்கும் உங்கள் பிரிக்க முடியாத சொத்து என்றதையும் எடுத்துக் கூறினார்கள் நானும் அதை வழிமொழிகிறேன் குறிப்பாக பார்த்தீர்கள் என்றால் சமுதாயத்தில் எந்த அடுக்கில் இருந்தாலும் பொருளாதாரத்தில் கல்வி உடைய முக்கியத்துவத்தை குறைக்கவே முடியாது குறிப்பாக ஏழை எளிய மக்கள் முன்னேற்றம் என்றால் கல்வியின் மூலம் தான் முன்னேற்றத்திற்கு முதல் பாதை இருப்பதிலேயே தெளிவான பாதை என்று எல்லோரும் அறிவோம்.
 
என்னைப் போன்று சொத்து நிறைய இருந்து குடும்பத்தில் பிறந்தவனுக்கு கூட கல்வியினால் வரும் முன்னேற்றமும், கல்வியினால் வரும் பாதுகாப்பும் வேறு எந்த வகையிலும் வராது. உங்கள் பெற்றோர்கள் எந்த அளவுக்கு நிதியில் முன்னேறி இருந்தாலும், கல்வியுடைய அவசியம் குறையாது. ஏனென்றால் அந்த கல்வி இல்லை என்றால் அந்த வாரிசு முறையாக வந்த சொத்தை கூட பாதுகாப்பதற்கு உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வரலாம். என் சமுதாயத்திலேயே நான் பார்த்தால் எங்கள் குடும்பத்தில் என் தாத்தா காலத்திலிருந்து கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் தான் நாங்கள் இந்த அளவிற்கு சமுதாயத்துக்கு பணி செய்து மக்கள் பணியில் ஈடுபட முடிகிறது என்று எனக்கு தோணுகிறது.

தமிழ்நாட்டில் 100% கல்வியறிவு  பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்வரின் இலக்கு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
 
என் தாத்தா 1900 ஆம் ஆண்டுகளில கேம்பிரிட்ஜ் பாரிஸ்டர் எல்லாம் படித்து வந்து தான் மக்கள் பணிக்கு வந்தார். அதேபோல் என் தந்தையும் பல சிறந்த கல்லூரிகளில் படித்து வழக்கறிஞராகி அந்த தொழிலை சிறப்பாக செய்து அந்த கல்வி அந்த தகுதியைப் பெற்ற பிறகு தான் பொது வாழ்க்கை வந்தார். அதேபோல் நானும் வெளிநாடுகளில் மற்றும் இங்கே அன்றைக்கு இருந்த ஆர்இசி இன்றைக்கு NIT திருச்சியில் பயிற்சி பெற்று அந்த ஒரு பாதுகாப்பு சூழ்நிலையை கல்வியினால் என்றைக்கும் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று சூழ்நிலையை உருவாக்கப்பட்டு தான் நான் பொது வாழ்க்கைக்குவந்தேன். அதனால் கல்வியோட முக்கியத்துவம் எல்லா பொருளாதார சூழ்நிலைகளும் எல்லா சமுதாயத்திலும் எல்லா நபர்க்கும் முக்கியம் என்பது நான் ஒரு உதாரணமாக எடுத்து நான் அதை கூறுகிறேன். அதிலும் சமுதாயத்தின் அனைவருக்கும் கல்வி பெற்றால் தான் ஒரு சமுதாயத்தோடு முன்னேற்றம் சிறப்பாக இருக்க முடியும்.

தமிழ்நாட்டில் 100% கல்வியறிவு  பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்குவதே முதல்வரின் இலக்கு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
 
நாளிதழில்  ஒன்றில்  கட்டுரை வந்திருந்தது அதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நபர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா நாட்டிற்குள்  எந்த ஒரு சான்றும் இல்லாமல் விசா இல்லாமல் மறைமுகமாக சட்டத்துக்கு விரோதமாக உள்ள போக முயற்சி செய்து எல்லையில் மாட்டிக் கொண்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்ற தகவல் வந்திருக்கு. அது நான்கு ஆண்டுக்கு முன்னால வெறும் 16,000 ஆக இருந்தது. இந்த ஆண்டு ஒரு லட்சம் ஆயிடுச்சு அப்படின்னு தகவல் வந்து அதிலும் குறிப்பாக கூறுகிறார்கள்.
 
அந்த ஒரு லட்சம் பேர் எங்கிருந்து வர்றாங்கன்னு பார்த்தா குஜராத் மாநிலத்தில் இருந்தும், பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும் கூடுதலாக வருகிறார்கள். இது ஏன் இன்னும் ஒரு ஆச்சரியத்தக்க ஒரு நிகழ்வு என்றால் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் இருக்கிற மூணு நாள் அஞ்சு முன்னேறிய மாநிலங்களில் ஒன்று குஜராத். அப்போ இவ்ளோ முன்னேறிய மாநிலத்திலேயே இத்தனை பேர் வேற ஒரு நாட்டுக்கு சட்ட விரோதமாக செல்வதற்கு அந்த ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றால், அந்த சமுதாயத்தில் வாய்ப்புகள் சமமாக வழங்கவில்லை என்றுதான் நாம் கருத வேண்டும்.
 
100 சதவீதம்
 
அதுவும் வேற புள்ளி விவரங்கள் காண்பிக்கிறது. 18 வயசு பெண்கள் பார்த்தால் வெறும் 50% தான் பள்ளியில் இருக்கிறார்கள் முடித்திருக்கிறார்கள். நம்ம தமிழ்நாட்டில் அது 90% இருக்கு அதையும் நூறு சதவீதம் ஆக்கணும் என்றது முதலமைச்சர் உடைய எண்ணம் இலக்கு. அதற்கு நாங்கள் எல்லாம் பணி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கல்வி எவ்வளவு முக்கியமோ அனைவருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முக்கியமான ஒரு சமுதாய வளர்ச்சிக்கு இருக்கிற அடிக்கல் ஒரு பவுண்டேஷன் அந்த வகையில் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் இத்தனை அரசு பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை இந்த ஸ்காலர்ஷிப் கொடுப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget