மேலும் அறிய

TN Teacher Vacancy: லட்சங்களில் வேலையில்லா பட்டதாரிகள்‌; பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் காலி இடங்கள் ஏன்?- ஈபிஎஸ் கண்டனம்‌

தமிழகத்தில்‌ லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள்‌ இருக்கும்‌ நிலையில்‌, பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்‌ பணியிடங்களை திமுக அரசு காலியாக வைத்திருப்பதாக ஈபிஎஸ் கடும்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில்‌ ஆசிரியர்‌ தகுதி பெற்ற லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள்‌ இருக்கும்‌ நிலையில்‌, பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்‌ பணியிடங்களை திமுக அரசு காலியாக வைத்திருப்பதாக ஈபிஎஸ் கடும்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில்‌ கோடை விடுமுறைக்குப்‌ பிறகு பள்ளிகள்‌ 12.6.2023 அன்று திறக்கப்படும்‌ என்று பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அறிவித்துள்ளார்‌. இந்நிலையில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள அரசு பள்ளிகளில்‌, சுமார்‌ 670 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ தலைமை ஆசிரியர் பணியிடங்கள்‌ காலியாக உள்ளதாகவும்‌; சுமார்‌ 435 உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ தலைமை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளதாகவும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன. 

வகுப்புகளில்‌ இரு மடங்கு மாணவர்கள் 

மேலும்‌, சுமார்‌ 12 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட மேல்நிலைப்‌ பள்ளி, உயர்நிலைப்‌ பள்ளி மற்றும்‌ ஆரம்பப்‌ பள்ளிகளில்‌ ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளதாகவும்‌ ஆசிரியர்‌ சங்கங்கள்‌ தெரிவித்துள்ளன.ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல்‌ 40 மாணவர்கள்‌ இருக்கவேண்டும்‌ என்று அரசு நிர்ணயித்துள்ள அளவைக்‌ காட்டிலும்‌, ஆசிரியாகள்‌ பற்றாக்குறையின்‌ காரணமாக வகுப்புகளில்‌ இரு மடங்கு மாணவர்கள்‌, அதாவது 60-க்கும்‌ மேலே மாணவர்கள்‌ படிக்கின்றனர்‌ என்றும்‌, இதனால்‌ வகுப்பறைகளில்‌ மாணவர்களைக்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியா்‌ சங்கத்தினர்‌ தெரிவிக்கின்றனர்‌.

ஆசிரியர்‌ பற்றாக்குறையின்‌ காரணமாக, ஒரு வகுப்பில்‌ நிர்ணயிக்கப்பட்ட அளவைக்‌ காட்டிலும்‌ அதிகமான மாணவர்கள்‌ படிக்கும்‌ நிலையில்‌, ஆசிரியர்களால்‌ ஒவ்வொரு மாணவரின்‌ மீதும்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி பாடம்‌ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தினால்‌, சென்ற ஆண்டு 12 மற்றும்‌ 10-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ சுமார்‌ 50 ஆயிரத்திற்கும்‌ மேலான மாணவர்கள்‌ தேர்வு எழுத வரவில்லை என்று அனைத்து ஊடகங்களிலும்‌, நாளிதழ்களிலும்‌ செய்திகள்‌ வந்தன. குறிப்பாக தமிழ்‌ எங்கள்‌ உயிர்மூச்சு என்று போலிவேஷம்‌ போடும்‌ இந்த திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ +2-வில்‌ சுமார்‌ 50 ஆயிரம்‌ மாணவர்கள்‌ தமிழ்‌ தேர்வு எழுத வராதது அனைவரிடமும்‌ பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து ஆராய இந்த நிர்வாகத்‌ திறனற்ற அரசு ஒரு குழு ஒன்றை அமைத்ததாக செய்திகள்‌ தெரிவித்தன. அக்குழுவின்‌ அறிக்கை என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை. 

ஆசிரியர் கலந்தாய்வு

மேலும்‌, ஆசிரியா்‌ கலந்தாய்வினை குறித்த காலத்தில்‌ நடத்தாத காரணத்தினால்‌ ஒரு சில பள்ளிகளில்‌ மிகை ஆசிரியர்களும்‌, பெரும்பாலான பள்ளிகளில்‌ ஆசிரியர் பற்றாக்குறையும்‌ உள்ளன. பள்ளிகளில்‌ மிகை ஆசிரியாகள்‌ உள்ளனரா என்பதை தற்போதுள்ள எமிஸ்‌-ஐக்‌ கொண்டே பள்ளிக்‌ கல்வித்‌ துறை தெரிந்து கொள்ளலாம்‌.குறிப்பாக அரசு உதவி பெறும்‌ பல பள்ளிகளில்‌ மிகை ஆசிரியர்கள்‌ உள்ளனர்‌ என்றும்‌, அவர்கள்‌ அரசு பள்ளிகளுக்கு மாறுதலில்‌ செல்ல விருப்பம்‌ தெரிவித்த நிலையில்‌, இதுவரை அவர்களுக்கு பணி மாறுதல்‌ வழங்கப்படவில்லை என்றும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தமிழகம்‌ முழுவதும்‌ அரசுப் பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பலமுறை பல்வேறு காரணங்களைக்‌ கூறி அரசு தள்ளி வைத்துள்ளது. தற்போது, ஆன்லைன்‌ முறையில்‌ கலந்தாய்வு நடத்தப்படும்‌ என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே, இம்முறையாவது திட்டமிட்டபடி கலந்தாய்வினை நடத்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்‌. இதன்‌ மூலம்‌ குறைந்தபட்சம்‌ மிகை ஆசிரியா்கள்‌ தாங்கள்‌ விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதலில்‌ செல்ல இயலும்‌. ஓரளவு ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களும்‌ பணி மாறுதல்‌ மூலம்‌ நிரப்பிட முடியும்‌.

மாணவர்கள்‌ படிப்பு பாதிக்காமல்‌ இருக்கும்‌

பணி மாறுதல்களுக்கும்‌, பணி இடங்களை நிரப்புவதற்கும்‌ ஏதேனும்‌ நடைமுறை சிக்கல்கள்‌ அல்லது வழக்குகள்‌ இருப்பின்‌, அவற்றுக்கு உடனடியாகத்‌ தீர்வு கண்டு, அனைத்து காலிப்‌ பணியிடங்களையும்‌ நிரப்பினால்‌ மட்டுமே, அரசு பள்ளிகளில்‌ வரும்‌ கல்வி ஆண்டில்‌ மாணவர்கள்‌ படிப்பு பாதிக்காமல்‌ இருக்கும்‌ என்பது ஆசிரியர்களின்‌ கருத்தாக உள்ளது.

எனவே, ஆட்சிப்‌ பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்‌ முடிந்த பிறகும்‌ பொறுப்பை மற்றவர்கள்‌ மீது சுமத்தாமல்‌, தமிழகத்தில்‌ ஆசிரியா்‌ தகுதி பெற்றவர்கள்‌ லட்சக்கணக்கில்‌ இருக்கும்‌ நிலையில்‌, அரசுப் பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவர்களுக்குத்‌ தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில்‌ காலியாக உள்ள ஆசிரியா்‌ பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று இந்த நிர்வாகத்‌ திறனற்ற அரசை வலியுறுத்துகிறேன்‌’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget