மேலும் அறிய

School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!

School Reopen in Tamilnadu: பள்ளிகளில் மாணவர்களை கோடை வெப்பத்தில் இருந்து  பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்- பாமக.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் அனல் காற்றும் தொடர்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக (ராமதாஸ் அணி) செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

 இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 ’’தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, நாளை (ஜூன் 4 ஆம் தேதி) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகின்றது, இந்த நடவடிக்கையை வரவேற்கும் அதே நேரத்தில், தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் அனல் காற்றும் தொடர்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மாணவர்களுக்கு நீரிழப்பு, தலைச்சுற்றல், மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் உடல்நிலை மாற்றங்களை உடனடியாகக் கண்டறிந்து தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.

 போதிய வசதிகள் அவசியம்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் போதுமான அளவில் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் நிழல் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, காலை வழிபாடு மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் முதலுதவி பெட்டிகள், அவசர மருத்துவ உதவி எண்கள் மற்றும் தேவையான சுகாதார வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

மேலும், புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள்  மற்றும் கல்வி உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். எந்த மாணவரும் அடிப்படை கல்வி உபகரணங்கள் இன்றி வகுப்பறையில் அமர வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.

ஆரோக்கியமான கல்விச் சூழல் அவசியம்

எதிர்காலத் தமிழ்நாட்டை உருவாக்கப் போகும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மைக் கடமையாகும். எனவே, பள்ளிகள் திறக்கப்படும் முன்பே மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வித் துறை உறுதி செய்து, மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலில் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக பாமகவைச் சேர்ந்த ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Baleno & Fronx Facelift: சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Embed widget