மேலும் அறிய

TRUST Exam: ஊரக‌ திறனாய்வு தேர்வு: பள்ளி மாணவர்கள் நவ.14 முதல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம்‌ செய்யலாம்!

2023- 2024ஆம்‌ கல்வியாண்டிற்கான “ஊரகத்‌ திறனாய்வு தேர்வு”-க்கான விண்ணப்பங்களை நவம்பர் 14 முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ அறிவித்துள்ளார்.

2023- 2024ஆம்‌ கல்வியாண்டிற்கான “ஊரகத்‌ திறனாய்வு தேர்வு”-க்கான விண்ணப்பங்களை நவம்பர் 14 முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ அறிவித்துள்ளார்.

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி,

தமிழ்நாடு அரசுத்‌ தேர்வுகள் துறையால்‌ ஆண்டு தோறும்‌ தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான தேர்வர்கள்‌ இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

என்ன தகுதி?

ஊரகப்‌ பகுதியில்‌ அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும்‌ டவுன்சிப்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற பள்ளிகளில்‌ 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ 9-ம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர் ஆவர்‌. நகராட்சி மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌ இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.

என்ன உதவித் தொகை?

ஊரகத்‌ திறனாய்வு தேர்வு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள், 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஆண்டு வருமானம்‌

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணவ மாணவியரின்‌ பெற்றோரின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ, 1,00,000/-க்கு (ரூபாய்‌ ஒரு இலட்சத்திற்கு) மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்பங்களை பதிவிறக்கம்‌ செய்தல்‌

16.12.2023 அன்று நடைபெறவுள்ள ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்களை 14.11.2023 முதல்‌ 24.11.2023 வரை பதிவேற்றம் செய்யலாம். குறிப்பாக www.dge.tn.gov.in என்னும் அரசுத் தேர்வுகள்‌ இயக்ககத்தின்‌ இணையதளம்‌ மூலம்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியா்கள்‌ பதிவிறக்கம்‌ செய்ய வேண்டும். அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை தேர்வுக்கு விருப்பமுள்ள மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன்‌ வருவாய்ச்‌ சான்றினையும்‌ இணைத்து 24.11.2023-க்குள்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.

பெறப்பட்ட விண்ணப்பங்களில்‌ உள்ளவாறு அனைத்து விவரங்களும்‌ சரியாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர்‌ உறுதி செய்த பிறகு இணையதளம்‌ மூலம்‌  தேர்வுக் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம்‌ செலுத்திய பிறகு மாணவர்களின்‌ விவரங்களை திருத்தம்‌ மேற்கொள்ள இயலாது என்ற விவரத்தினை பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ அறிவுறுத்த வேண்டும்‌.

தேர்வுக் கட்டணம்‌ செலுத்திய பிறகு Summary Report, பள்ளியில்‌ பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள்‌ (தேர்வர்களின்‌ விவரங்களுடன்‌) முதன்மைக்‌ கல்வி அலுவலரிடம்‌ ஒப்படைத்திட பள்ளித்‌ தலைமை ஆசிரியாகளை அறிவுறுத்த வேண்டும்‌ என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ அறிவித்துள்ளார்.

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://tnegadge.s3.amazonaws.com/notification/TRUST/1699517012.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in 

இதையும் வாசிக்கலாம்: Coimbatore Ragging: கல்லூரியில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் - கல்லூரி முதல்வர்களுக்குப் பறந்த உத்தரவுகள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget