![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது.
![ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா! Tamil Nadu govt announces 5 day holidays for all school students Here is the quarterly exam timetable ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/09/e3e6247ad235e2ac82ab404291227df81725898158674729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாள்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்ளுக்கு செப்டம்பர் 20 முதல் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.
வெளியானது காலாண்டு தேர்வு அட்டவணை:
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரையில், அவர்களுக்கு செப்டம்பர் 19 தொடங்கி 27 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கியது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கியது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கடந்தாண்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ஆம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கியது. அதேபோல டிசம்பர் 13ஆம் தேதி 6 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையும் படிக்க: Miladi Nabi Holiday: மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறையில் மாற்றம்.. செப்டம்பர் 16 இல்ல.. அப்போ எப்போ?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)