எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு..இலவச பயிற்சி வகுப்புகள் உங்களுக்காக.. முழு விவரம் இதோ!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இத்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராககவராவ் அறிவித்துள்ளார்.
மாநில வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு எழுத விரும்புவோர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கு அறிவித்துள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவர்கள் அக்டோபர் 8 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான பாடக்குறிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு துறை சார்பில் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களைப் பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கல்வித் தொலைக்காட்சி வழியாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:00 முதல் 9:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் ஒளிப்பரப்பப்பட உள்ளது. இரவு 7:00 முதல் 9:00 மணி வரை மறு ஒளிபரப்பு செய்யப்படும்.
'TN Career Services Employment' என்ற 'யுடியூப் சேனலில்' பாடத்திட்டங்கள் குறித்து விளக்க வீடியோக்கள் கிடைக்கும். அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ வட்டங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'TN Career Services Employment' என்ற யூடுயூப் சேனலின் லிங்க் கீழே காணலாம்.
விண்ணப்பிக்க மறந்துடாதீங்க..
SSC CGL 2022: எஸ்.எஸ்.சி- சிஜிஎல் பதவிக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்; வாய்ப்பை தவற விடாதீர்கள்...
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு:
மத்திய அரசு பணியாளர் தேர்வையாளத்தின் 20 ஆயிரம் குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான Combined Graduate Level தேர்வுக்கான அறிவிப்பிற்கான தேர்வுக்கு இலவச பயிற்சியினை சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், பழங்குடிய/ பட்டியலின வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 11.10.2022 அன்று இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.