Boys vs Girls TN 12th Result: 12-ஆம் வகுப்பு தேர்வில் கெத்து காட்டிய மாணவ, மாணவிகள்.. அதிகம் தேர்ச்சி பெற்றது யார்?
Tamil Nadu 12th Result 2023: 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் மாணவ,மாணவிகளில் யார் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை காணலாம்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் மாணவ,மாணவிகளில் யார் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை காணலாம்.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாற்றப்பட்ட ரிசல்ட் தேதி
விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு முதலில் மே 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. ஆனால் நேற்று ( மே 7) இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்தது.
வெளியான தேர்வு முடிவுகள்
அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
12 ஆம் வகுப்பு தேர்வு எழுத 8.65 லட்சம் மாணவ,மாணவிகள் விண்னப்பித்த நிலையில், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 4,21,013 ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 3,82, 371 ஆகும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் எண்ணிக்கை 4, 05, 753, மாணவர்கள் 3, 49, 697 ஆகும். 3ஆம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 % ஆகும். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.