![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை..
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி முடிவுகளில், சதவீத அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்று அசத்தியுள்ளது.
![TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை.. Tamil Nadu 12th Public Exam Result 2022 Pass Percentage District Wise Perambalur District at First Place TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/20/5f53074052203a65fb58931a7dfa0bfa_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
பிரிவு வாரியாக தேர்ச்சி சதவீதம்:
அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் 95.51 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்கள் 92.51 சதவீதமும், கலைப்பிரிவு மாணவர்கள் 85.13 சதவீதமும், தொழிற்பாடப் பிரிவுகள் 84.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 96.47 சதவீதமும், வேதியியல் பாடத்தில் 97.96 சதவீதமும், உயிரியியல் பாடத்தில் 96.89 சதவீதமும், கணிதம் பாடத்தில் 97.29 சதவீதமும், தாவரவியில் பாடத்தில் 95.34 சதவீதமும், விலங்கியல் பாடத்தில் 96.01 சதவீதமும், கணினி அறிவியல் பாடத்தில் 99.39 சதவீதமும், வணிகவியல் 96.31 சதவீதமும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 93.76 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)