TN 11th Result 2024: 11ம்வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்து அசத்திய கோவை - முழு விபரம் இதோ..!
11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 96.02 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் முதலிடத்தையும், 95.56 சதவீத தேர்ச்சி உடன் ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்கள் மற்றும் 4 இலட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகள் என மொத்தம் 8 இலட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதினர். இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்விகளில் 7 இலட்சத்து 39 ஆயிரத்து 539 (91.17% ) பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 4.04 லட்சம் மாணவிகள் மற்றும் 3.35 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் 7.43 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3432 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
முதலிடம் பிடித்து அசத்திய கோவை
11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 96.02 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் முதலிடத்தையும், 95.56 சதவீத தேர்ச்சி உடன் ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 95.23 சதவீத தேர்ச்சி உடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 81.40 ஆகும். கோவை மாவட்டத்தில் மொத்தம் 35 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 34 ஆயிரத்து 210 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.49 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் 92.86 சதவீதம் உடன் ஈரோடு மாவட்டம் முதல் இடத்திலும், 92.06 சதவீத தேர்ச்சி உடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும், 91.64 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் நான்காவது இடத்திலும் உள்ளது. கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.64 சதவீதமாக உள்ளது. 116 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 828 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 10 ஆயிரத்து 839 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.99 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.76 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.