மேலும் அறிய

TN 11th 12th Hall Ticket: 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித் தேர்வர்களுக்கு பிப்.19-ல் ஹால்டிக்கெட்- பெறுவது எப்படி?

Tamil Nadu 11th 12th Hall Ticket 2024: 11, 12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வுகளை எழுதும் தனித்‌ தேர்வர்கள்,‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை பிப்.19 முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம்.

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளை எழுதும் தனித்‌ தேர்வர்கள்,‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை பிப்ரவரி 19 முதல் இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி வேதியியல், கணக்கியல், நிலவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட வாரியாகத் தேர்வுகள்

கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.

தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன. மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஒரே தேதியில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:

''நடைபெறவுள்ள மார்ச்‌ - 2024, மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டுப் பொதுத் தேர்வு எழுத, விண்ணப்பித்த தனித் தேர்வர்கள்‌ (தட்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 19.02.2024 அன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

* தனித் தேர்வர்கள்‌, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச்‌ செல்லவும்.

* அதில் “HALL TICKET” என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால்‌ ஒரு பக்கம் தோன்றும்‌.

* அதில்‌ உள்ள “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH- 2024 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தை ‘Click’ செய்யவும்.

* அதில் தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண்‌ மற்றும் பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்யவும்.

* மாணவர்கள், அவர்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஒரே ஹால் டிக்கெட்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும்‌ இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும்‌ சோத்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும்‌ வழங்கப்படும்‌மார்ச்‌ - 2024, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்‌''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget