மேலும் அறிய

TN 10th Result 2026: இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு இணையதளத்தில் அறிவது எப்படி? நேரடி லிங்க்

Tamil Nadu 10th Result 2026 Declared: தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிவதற்கான, அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 10th Result 2026 Declared: தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, வாட்ஸ்-அப் வாயிலாக அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு அரசு சார்பில் 2025-26 நிதியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த,மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 8 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள், 25 ஆயிரத்திற்கும் அதிகமான தனித்தேர்வர்கள் மற்றும் 395 சிறைவாசிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்ட நிலையில், தேர்வின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.

எங்கு? எப்போது? தேர்வு முடிவுகள் வெளியாகும்?

அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 20ம் தேதி (இன்று) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால், சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு வெளியாகும் முதல் பொதுத்தேர்தல் முடிவுகள் இதுவாகும்.

அரசு தளங்கள் - நேரடி லிங்க்

காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டதும், www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கான மற்ற வாய்ப்புகள் என்ன?

மேற்குறிப்பிடப்பட்ட வாய்ப்புகள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாகவும் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட உள்ளன. 

உடனடி மறுதேர்வுகள்

தேர்ச்சி பெற்றவர்கள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் மதிப்பெண் பட்டியல் தற்காலிகமானது. பள்ளிகள் மூலம் வழங்கப்படும் அசல் சான்றிதழ்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். தேர்ச்சி பெற தவறிய அல்லது மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். துணை தேர்வுகளுக்கான தேதிகளும் இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தேர்வில் தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழந்த நபர்கள், உடனடியாக துணை தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று, தாமதமின்றி 11ம் வகுப்பில் இணைய வழிவகுக்கிறது. இதுதொடர்பான விரிவான தகவல்களை பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் பெறலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget