மேலும் அறிய

TN 10th Result 2024: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அதிர்ச்சி ..! 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பின்னடைவு ? - தேர்ச்சி சதவீதம் என்ன ?

Chengalpattu 10th Result 2024: செங்கல்பட்டு மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகளில் அடிப்படையில் 87.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள் என்ன ? ( Chengalpattu 10th Result )

செங்கல்பட்டு மாவட்டத்தில் 15968  மாணவர்களும்,15948 மாணவிகளும் மொத்தம் 31916 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இவற்றில் 13,317 மாணவர்களும்,  14 ஆயிரத்து 572 மாணவிகளும் மொத்தம் 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்  83.40,  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.37, மாவட்ட மொத்த தேர்ச்சி சதவீதம் 87.38 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு  என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு  சதவீதம்  88.27 ஆக இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.  33வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் பிடித்துள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 79.20 ஆக உள்ளது. அரசு பள்ளி தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 36-வது இடத்தை செங்கல்பட்டு பிடித்துள்ளது.

ALSO READ: Tamil Nadu 10th Result 2024 LIVE: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் லைவ்

முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

  •  தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in  அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.
  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget