10th Result 2023 Salem: சேலம் மாவட்ட 10ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள்: மொத்தம் எத்தனை பேர் தேர்ச்சி - முழு விவரம் இதோ
Tamil Nadu 10th Result 2023 Salem District: சேலம் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.79 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.52 ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,55, 017 மாணவிகள், 4,59,303 மாணவகள் என மொத்தம் 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,35, 614 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,04, 904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 91.13% தேர்ச்சி.
சேலம் மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 21,835 மாணவர்கள், 21,593 மாணவிகள் என 43,428 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 19,168 மாணவர்கள், 20,410 மாணவிகள் என மொத்தம் 39,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.79 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.52 ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.13% ஆகும். அரசு பள்ளிகளை பொறுத்தவரை 263 பள்ளிகளைச் சேர்ந்த 23,508 மாணவர்கள் தேர்வு எழுதி நிலையில், 20,759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.31 ஆக உள்ளது.
மாவட்ட வாரியாக விவரம் :
இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் (97.67% ), சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 4வது இடத்தில் கன்னியாகுமரி (95.99%), 5வது இடத்தில் தூத்துக்குடி (95.58%), 6வது இடத்தில் அரியலூர் (95.40%), 7வது இடத்தில் ஈரோடு (94.43%), 8 வது இடத்தில் திருச்சி (94.28%), 9வது இடத்தில் திருநெல்வேலி (94.19%), 10வது இடத்தில் தென்காசி (94.12%) ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
தேர்வு முடிவு:
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவ, மாணவிகள் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கும் முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்