மேலும் அறிய

Revaluation Results 2024: வெளியான 10, 11, 12ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?

10th 11th 12th Revaluation Results 2024: இந்தப் பட்டியலில்‌ இடம்‌ பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில்‌ எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

நடைபெற்று முடிந்த ஜூன்‌ / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு  (+1) / பத்தாம்‌ வகுப்பு துணைத் தேர்வுகள் எழுதி, மறுகூட்டல்‌ (Re-total) மற்றும்‌ மறு மதிப்பீடு (Revaluation) முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதற்கு விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தனித் தேர்வர்களது பதிவெண்களின்‌ பட்டியல்‌ என்ற இணையதளத்தில்‌ (Notification பகுதியில்‌) இன்று (30.08.2024 - வெள்ளிக்கிழமை) பிற்பகல்‌ வெளியிடப்பட்டு உள்ளது.

தேர்வர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1725010700.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

அதேபோல 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிந்துகொள்ள https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1725010525.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

10ஆம் வகுப்புக்கும் வெளியீடு

தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிந்துகொள்ள https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1725010898.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

விடைத் தாள்களில்‌ எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை

இந்தப் பட்டியலில்‌ இடம்‌ பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில்‌ எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறு கூட்டல்‌ / மறு மதிப்பீட்டில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தனித்தேர்வர்கள்‌ மட்டும்‌, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள்‌அடங்கிய மதிப்பெண்‌ பட்டியல்‌ (Statement of Marks) / தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ (Provisional Certificate) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தனித் தேர்வர்களுக்கு சான்றிதழ் எப்போது?

மேலும்‌, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு / பத்தாம்‌ வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌ தேதி குறித்து பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget