மேலும் அறிய

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; +2 முடித்த மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் வேலை- விவரம்!

தாட்கோ சார்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் சேர்ந்து படிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் (B.Sc- Hospitality & Hotel Administration) பட்டப்படிப்பில் சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத் தேர்வு (NCHM JEE-2026) மூலமாக B.Sc (Hospitality Hotel Administration) ஹோட்டல் மேனேஜ்மென்ட்கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எங்கே? என்ன படிப்பு?

சென்னை தரமணியில் உள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலாதுறையின் கீழ், அமையப்பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச Amercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

Hotel Management Institute Survey 2022- ன்படி உலகளாவிய மனிதவள மேம்பாட்டுமையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEOWORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மைப் பள்ளிகளில் உலக தரவரிசையில் பதிமூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மேற்கண்ட நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராகவும், பனிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பவருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத்தேர்வு (NCHM JEE-2026) க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2026 இத்தேர்வானது 25.04.2026 அன்று இணையதளம் வழியாக நடைபெறும்.

இத்தேர்வினை பற்றிய மேலும் விவரங்கள் மற்றும் பதிவு செய்ய http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதளத்தினை தொடர்புகொள்ளலாம். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். மேலும் இப்படிப்பினை தாட்கோ மூலமாக www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யவேண்டும்.

ஊதியம் எவ்வளவு?

இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தங்களது திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/-வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/-வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம் என்று தாட்கோ தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
Embed widget