மேலும் அறிய

Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?

மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி என ஜோதிமணி எம்.பி., காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மை என அக்கட்சியின் கரூர் மாவட்ட எம்.பி., ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் கருத்து மோதல்

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முறையும் திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி நீடித்து வருகிறது. ஆட்சியில் பங்கு கேட்டது தொடங்கி 40 தொகுதி வரை சட்டமன்ற தேர்தலில் வேண்டும் என நிபந்தனை விதித்தது வரை அடுத்தடுத்து பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றது. பல கட்ட பேச்சுவார்த்தை, திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் என இந்த கூட்டணி நீடிக்குமா என ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்படும் அளவுக்கு நிலைமை இருந்தது.

தீராத உட்கட்சி பூசல்

எனினும் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் திமுக ஒதுக்கியது. தற்போது அடுத்த சிக்கலாக எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி நீடித்து வருகிறது. இதில் தென்காசி, விருத்தாச்சலம் தொகுதியை 2021ல் பெற்றிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது. கடந்தமுறை அக்கட்சி வென்ற 16 தொகுதிகளை மீண்டும் கேட்டுப் பெற்றுள்ளது. அதேபோல் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விட்டுக்கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதியையும் காங்கிரஸ் கட்சி கேட்டு வாங்கியுள்ளது. 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் தேர்வாகியுள்ள நிலையில் மீதமுள்ள 5 தொகுதிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியை காப்பாத்துங்க

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட எம்.பி., ஜோதிமணி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.

நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” என தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ஜோதிமணியின் ட்வீட் தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget