Anbil Mahesh on New Education Policy: இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முயற்சி - மத்திய அரசு மீது அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால், புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார்.
மாநில கல்வி அமைச்சர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையில் பங்கேற்கவில்லை என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாநில கல்வி அமைச்சர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் ஆலோசனையில் பங்கேற்கவில்லை. புதிய கல்விக்கொள்கையில் உள்ள அம்சங்கள் குலக்கல்வியை திணிப்பதாக உள்ளது. இருமொழி கொள்கையை ஒழித்து மும்மொழிக் கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கைக்கு வேட்டு வைக்க மும்மொழிக்கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். 3,5,8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குழந்தைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல். ஆனால், புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” என்று கூறினார்.
மேலும், மறைமுகமாக இந்தி சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி குற்றம்சாட்டினார்.
முன்னதாக, புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் மாநில கல்வி அமைச்சர்களுடன் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்கபடாத நிலையில் தமிழக அரசு இந்த ஆலோசனையை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Union Education Minister Ramesh Pokhriyal Nishank to meet with all Vice Chancellor's of Central University virtually tomorrow to review the online education in COVID19 Pandemic and Planning and Implementation of NEP-2020

(File photo) pic.twitter.com/dnh6dyRqKw
— ANI (@ANI) May 17, 2021

ஆன்லைன் வகுப்புகள், புதிய கல்விக்கொள்கை அமல் தொடர்பாக, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நாளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்துகிறார்.