மேலும் அறிய

SC Students: பள்ளிகளில் குறைந்த எஸ்சி மாணவர் சேர்க்கை: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

குறைவான எஸ்சி மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறைவான எஸ்சி மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’சென்னை மாவட்டம்‌, விருகம்பாக்கம்‌ பகுதியைச்‌ சேர்ந்த கிருத்துதாசு காந்தி என்பவரிடமிருந்து பெறப்பட்ட மனுவின்‌ நகல்‌ தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ மாணவர்களின்‌ சேர்க்கை விகிதம்‌ எஸ்சி மாணவர் சேர்க்கை 20% க்கு மேலுள்ளது என்றும்‌ அரசுப்‌ பள்ளி உட்பட சில ஆயிரம்‌ பள்ளிகளில்‌ எஸ்சி மாணவர்‌ சேர்க்கை 18%க்குக் கீழாகவும்‌ , 1000 பள்ளிகளில்‌ 5%-க்குக் குறைவாகவும்‌ உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தற்போது எஸ்சி மாணவர்‌ சேர்க்கை 18% க்குக் குறைவாக உள்ள பள்ளிகளில்‌ ஆய்வு மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து எஸ்சி மாணவர் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌’’.

இவ்வாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SC Students: பள்ளிகளில் குறைந்த எஸ்சி மாணவர் சேர்க்கை: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

முன்னதாக கிருத்துதாசு காந்தி அனுப்பியுள்ள மனுவில், ''தமிழ்நாட்டில்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ எஸ்சி மாணவர் சேர்க்கை விகிதம்‌, பொதுக் கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது என்பது மாநிலப்‌ பெருமை.

தமிழ்நாட்டில்‌ அனைத்து வகையான பள்ளிகளிலும் 13,000 பள்ளிகளில் எஸ்சி மாணவர் சேர்க்கை 20%-க்கு மேலுள்ளது. சில ஆயிரம்‌ பள்ளிகளில்‌ 50 %-க்கு மேலும்‌ உள்ளனர்‌. ஆயினும்‌ வேறு 10,000 பள்ளிகளில்‌ (அரசுப்‌ பள்ளிகள்‌ உட்பட) எஸ்சி மாணவர்‌ சேர்க்கை 18%-க்குக்‌ கீழாகவே உள்ளது. 

1000 பள்ளிகளில்‌ இது 5%-க்குக்‌ குறைவாகவும்‌, 100 பள்ளிகளில்‌ 0% ஆகவும்‌ உள்ளது. இதுபற்றிய புள்ளிவிவரங்களை 2005 முதல்‌ அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வந்தும்‌ இது பற்றிய ஆய்வு ஏதும்‌ மேற்கொள்ளப்பட்டதாகத்‌ தகவல்‌ இல்லை.

தற்போதாவது 18%-க்குச்‌ சான்றோர்ச்‌ சேர்க்கைக்குக்‌ குறைவான பள்ளிகளின்‌ ஆய்வை மேற்கொண்டு உரிய காரணங்களை அறிந்து, எஸ்சி மாணவர்‌ சேர்க்கைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்''‌ என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget