திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி; உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே நம்பர் 1- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (02.08.2024) பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். மாணவ, மாணவிகளைப் பாராட்டி, சான்றிதழ் மற்றும் மடிக்கணிணிகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 448 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
’’திமுக ஆட்சியில் கல்வித் துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் அறிவு சொத்துகளாக மாணவர்கள் திகழ்கிறார்கள். உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரி மாணவர் சேர்க்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளது’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.