மேலும் அறிய

Ponmudi on CUET: 'எந்த ரூபத்திலும் நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டோம்' - அமைச்சர் பொன்முடி உறுதி

எந்த ரூபத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

எந்த ரூபத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் 3ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் கூறும்போது, ''திமுக தேர்தல் அறிக்கையில் மாநிலக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் எனவும் அதற்குக் கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அது குறித்துக் கடந்த நிதிநிலை அறிக்கையிலும் சரி, இந்த நிதிநிலை அறிக்கையிலும் சரி அறிவிப்பு இல்லை. எனவே நாம் பின்பற்றப் போவது, தேசியக் கல்விக் கொள்கையா? அல்லது மாநிலக் கல்விக் கொள்கையா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் நுழையாது. நுழையவும் விட மாட்டோம்'' என்று தெரிவித்தார். 

''உயர் கல்வித்துறை அமைச்சரின் உத்தரவாதத்துக்கு நன்றி'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, ''மாநிலக் கல்விக் கொள்கையை நிறைவேற்ற இந்த மாதத்திற்குள் குழு அமைக்கப்பட உள்ளது. புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம். மாநில கல்வி கொள்கைக் குழு உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்

புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். அதைத் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம். அதேபோல எந்த ரூபத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம். அது எப்படி தமிழ்நாட்டுக்குள் நுழைய முயன்றாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பார்'' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படுமென்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கு பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் மண்டலா ஜெகதீஷ் குமார், ''மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு (one nation, one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.  இந்த நடைமுறை மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்துக் கல்வி வாரியங்களையும் சார்ந்த, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக அமையும்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியையும் வாசிக்கலாம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி

கல்லூரிகளில் திருநருக்கு இலவச இடம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு 

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Embed widget