மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி
மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்காகப் பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) (Common University Entrance Test (CUET))
நடத்தப்படுகிறது. மத்தியபல்கலைக்கழகத்தில் 2022-2023ஆண்டு ணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என யு.ஜி.சி.யின் தலைவர் எம். ஜெகதீஸ் குமார் (M Jagadesh Kumar) தெரிவித்துள்ளார்.
இத்தேர்வு தமிழ், இந்தி,மராத்தி,குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.
பல்கலைக்கழக பொதுப் நுழைவுத் தேர்வு (CUET) என்பது முழுவதும் கணினி வழி ர்வாகும். இது தேசிய தேர்வு முகமையால் ( National Testing Agency- NTA) நடத்தப்படும். இது குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான தகவலை நாளை (செவ்வாய்,23,2022) வெளியிடுகிறது.
பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மாறாமல் இருக்கும்.
இந்தத் தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும். இந்த தேர்வானது உயர் தொழில்நுட்ப திறனறித் தேர்வாக இருக்கும். இந்த பொது நுழைவுத் தேர்வானது 3 மணி நேரம் நடத்தப்படுகிறது. இளநிலை படிப்புக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறான பதில்ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் இந்தத் தேர்வின் பாடத்திட்டம் NCERTயின் 12ம் வகுப்பு பாடத்திட்டம் போன்று இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ajith: 23 வருஷம் ஒன்னாவே.. உன்னோட வாழாத வாழ்வென்ன வாழ்வு..? ஹிட்டடித்த அஜித் - ஷாலினி ஸ்னாப்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்