Pongal 2026 Holidays: போடு தகிட தகிட… 5 நாட்கள் பொங்கல் விடுமுறை- பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
Pongal 2026 Holidays List: பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தினங்கள் 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாள் ஜனவரி 18 ஞாயிற்றுக் கிழமை வழக்கமான விடுமுறைதான்.

2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி 14 அளிக்கப்பட்டால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
பொங்கலோ பொங்கல்
தைப்பொங்கல் என்பது வெறும் விடுமுறையோ அல்லது சர்க்கரைப் பொங்கல் தினமோ மட்டுமல்ல, அது நம் வாழ்வின் புதிய தொடக்கத்திற்கான அடையாளம். இயற்கையையும் உழவையும் அறுவடையையும் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த தினத்தில்தான் தை 1ஆம் தேதி வருகிறது. இதைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்த தினமான ஜனவரி 17 அன்று காணும் பொங்கலும் உழவர் தினமும் கொண்டாடப்படுகிறது. இந்த தினமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு அரசு விடுமுறை
அதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தினங்கள் 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாள் ஜனவரி 18 ஞாயிற்றுக் கிழமை வழக்கமான விடுமுறைதான்.
இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி பழையன கழிக்கும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளிலும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. அவ்வாறு விடுமுறை அளித்தால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஏன் அரசு ஊழியர்களுமே ஆழ்ந்துள்ளனர்.
ஜாலி மாதம் ஜனவரி மாதம்
ஜனவரி மாதம் பொதுவாக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாகவே அமைந்துள்ளது. மாதத்தின் முதல் நாளிலேயே புத்தாண்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்துக்கு ஜனவரி 26ஆம் தேதி தேசிய விடுமுறை அளிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. இதனால் ஜனவரி மாதம் என்றாலே ஜாலிதான் என்று மாணவர்கள் குஷியாகக் கூறி வருகின்றனர்.






















