மேலும் அறிய

National Education Policy: ஜன.12-ல் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக நாடாளுமன்ற பேரணி; 25ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஜனவரி 12ஆம் தேதி 25ஆயிரம் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணியை நடத்த உள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 12ஆம் தேதி 25ஆயிரம் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணியை நடத்த உள்ளனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாணவ சங்கங்கள் இந்தப் பேரணியை நடத்துகின்றன. 

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தற்போது ஒன்றாக இணைந்து, United Students of India என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.

நாட்டில் செயல்பட்டு வரும் 16 மாணவர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தது. இதுதொடர்பாக டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

கல்வியைக் காப்பாற்ற தேசிய கல்விக் கொள்கையை நிராகரியுங்கள்; இந்தியாவைக் காப்பாற்ற, பாஜகவை நிராகரியுங்கள் (Save Education, Reject NEP; Save India, Reject BJP) என்ற முழக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில்  மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து திமுக மாணவர் அணிச் செயலாளரும் எம்எல்ஏவுமான சிவிஎம்பி எழிலரசன் கூறும்போது, “Save EDUCATION - Reject NEP; Save INDIA - Reject BJP” என்ற முழக்கத்துடன், வரும் 12.01.2024 தேதியன்று, தலைநகர் டெல்லியில் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி (Parliament March) நடத்திட யுனெடெட் ஸ்டூடென்ஸ் ஆஃப் இந்தியா (United Students of India) கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

தொடர்ந்து அதே கருத்தை பரப்புரை செய்யும் வகையில் சென்னையில் 2024, பிப்ரவரி 1-ம் தேதியன்றும் மாபெரும் பேரணியை நடத்தவும் “United Students of India” கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (ஜன.10) சென்னையில் நடைபெற உள்ளது.

முன்னதாக, இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 16 மாணவர் சங்கங்களின் தலைவர்கள், ’’கல்வி இல்லையென்றால் ஜனநாயகம் வலுவிழக்கும். ஜனநாயகம் வலுவிழந்தால் நமது சுதந்திரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால் கல்வி உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தோடு; கல்வியை வணிகமயமாக்கும், காவிமயமாக்கும், அனைவருக்குமான சமவாய்ப்பை மறுக்கும், குலக்கல்வித் திட்டத்திற்கு வழிவகுக்கும், இருமொழிக் கல்வி கொள்கையை இருட்டடிப்பு செய்யும்,சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றைப் பண்பாட்டு தேசமாக அதிலும் குறிப்பாக சமஸ்கிருத பண்பாட்டுத் தேசமாக இந்தியாவை கட்டமைக்க வழிவகுக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிப்போம்’’ என்று கோரிக்கை விடுத்தது நினைவுகூரத் தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget