காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும்... ஒடிசாவில் அமலாகும் அறிவிப்பு
இந்தியாவில் வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மெகாபத்ரா தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சராசரியாக அதிகபட்ச வெப்ப நிலை நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, ஒடிசா மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமால் தவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் வரை இந்த வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதிய கற்பித்தல் நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரை மாற்றியமைத்த நேரம் (திங்கட்கிழமை) இன்று முதல் அமலுக்கு வந்தது.
Heatwave | Odisha Government reschedules the timing of teaching hours in all schools from 6 am to 9 am w.e.f. 2nd May 2022. However, the examination already scheduled by different Boards/Councils will continue as usual. pic.twitter.com/3bYGEDwxp3
— ANI (@ANI) April 30, 2022
இருப்பினும், வெவ்வேறு வாரியங்கள் மற்றும் கவுன்சில்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு வழக்கம் போல் தொடரும்” என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்தியில் உள்ள மூன்று நகரங்களில் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்ப சுபர்னாபூர், சம்பல்பூர், சுந்தர்கர், பௌத், போலங்கிர், பர்கர், ஜார்சுகுடா, கியோஞ்சர், தியோகர் மற்றும் அங்குல் மாவட்டங்களில் வெப்ப அலை வீசியதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்