மேலும் அறிய

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'N95' மாஸ்க் - தேர்வு முகமை அறிவிப்பு!

சானிடைசர்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் என்றும் முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் புதிய ‘N95’ ரக மாஸ்க்கள் வழங்கப்படும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாளை நீட் 2021 தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெற இருக்கும் நிலையில் தேசியத் தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வு அறையில் இந்த மாஸ்கை அணிந்துகொண்டுதான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும். சானிடைசர்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் என்றும் முகமை அறிவித்துள்ளது. இதுதவிர கொரோனா தொடர்பான படிவம் ஒன்றும் மாணவர்களுக்குத் தரப்படும் என்றும் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்த பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணிக்குத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் தேர்வு மையத்துக்கு 1:30 மணிக்கே வரச்சொல்லி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.


நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'N95' மாஸ்க் - தேர்வு முகமை அறிவிப்பு!

இது தவிர மற்ற ஆண்டுகள் போல இல்லாமல் இந்த ஆண்டு நடைபெறும் இளநிலை நீட் தேர்வுகளில் சில மாற்றங்களை தேசியத் தேர்வு முகமை அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி நீட் தேர்வுத்தாளில் வழக்கமாக 180 கேள்விகள் கொடுக்கப்படும். அவற்றில் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். 

ஆனால் இந்த முறை தேர்வில் இடம்பெறும் நான்கு பாடங்களுக்கும் பாடவாரியாக முதல் பகுதியில் 35 கேள்விகளும் இரண்டாவது பகுதியில் 15 கேள்விகளும் கொடுக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலிருந்தும் 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. மேலும் சாய்ஸ் முறையும் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து அமலுக்கு வருகிறது.  இதில் முதல் பகுதியில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளில் 10க்கு பதில் அளித்தாலே போதுமானது. கேட்கப்படும் 15 கேள்விகளில் பதில் தெரிந்த 10 கேள்விகளுக்கு பதில் அளித்தாலே போதும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.ஆனால் ஒன்றுக்குத் தவறான விடை அளித்தாலும் அது நெகட்டிவ் மதிப்பெண்ணாகக் கருதப்படும். அதற்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதில் அளிக்காத சூழலில் அது நெகட்டிவ் மதிப்பெண்ணாக கருதப்படாது.
 மேலும் முதன்முறையாக பஞ்சாபி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் சேர்க்கப்பட்டு 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு மத்தியக் கிழக்கு நாடான குவைத்திலும் ஒரு இந்திய நீட் தேர்வு மையம் நாளை இயங்க இருக்கிறது.
இதுதவிர இதுவரை மொத்தம் 155 நீட் தேர்வு நகரங்களில் மையங்கள் செயல்பட்ட நிலையில் கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 43 புதிய நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் சேர்க்கப்பட்டு 198 நகரங்களில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தலைப்பு செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
LPG Tanker Accident: கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
DMK ELECTION PLAN : 7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
Embed widget