மேலும் அறிய

Nokkam App: மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி: தமிழக அரசின் நோக்கம் செயலி அறிமுகம்- முழு விவரம்

மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக, தமிழக அரசின் சார்பில் அண்ணா மேலாண்மை நிறுவனம், ’நோக்கம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக, தமிழக அரசின் சார்பில் அண்ணா மேலாண்மை நிறுவனம், ’நோக்கம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் TNPSC,UPSC, SSC, IBPS உள்ளிட்ட மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.  

இதுகுறித்து அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி இன்று கூறி உள்ளதாவது:

'நோக்கம்‌' செயலி அறிமுகம்‌

தமிழ்நாடு அரசின்‌ முதன்மைப்‌ பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி அரசுத்‌ துறைகளிலும்‌, பொதுத்‌ துறை நிறுவனங்களிலும்‌ பணிபுரிபவர்களுக்குப்‌ பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின்‌ தன்மையை விரிவுபடுத்தவும்‌. தமிழகத்தின்‌ மூலை முடுக்குகளுக்கெல்லாம்‌ அது சென்றடைய வேண்டும்‌ என்ற எண்ணத்திலும்‌ AIM TN என்று அழைக்கப்படும்‌ யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்து அதில்‌ பயிற்சிக்‌ காணொலிகளைப்‌ பதிவேற்றம்‌ செய்து வருகிறது.

இந்த யூடியூப் தளத்தின்‌ நீட்சியாக  அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி போட்டித்‌ தேர்வுகளுக்கென்றே 'செயலி' ஒன்றை உருவாக்கியுள்ளது.

Nokkam App: மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி: தமிழக அரசின் நோக்கம் செயலி அறிமுகம்- முழு விவரம்

'நோக்கம்‌' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியின்‌ மூலம்‌ தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம்‌ (TNPSC), தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ (TNUSRB), மத்திய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (UPSC), வங்கிப்‌ பணியாளர்‌ தேர்வு நிறுவனம்‌ (IBPS), மத்திய ஆட்சேர்ப்பு வாரியம் (SSC) போன்ற அனைத்து நிறுவனங்கள்‌ நடத்தும்‌ தேர்வுகளுக்கும்‌ பயிற்சி அளிக்கத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. 

அன்றாடம்‌ பதிவேற்றப்படும்‌ பயிற்சிக்‌ காணொலிகளைக்‌ காண்பதோடு அதற்கான பாடக்‌ குறிப்புகளையும்‌ இந்த செயலி மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இதன்‌ சிறப்பம்சமே மாதிரித்‌ தேர்வுகள்தாம்‌.

ஒவ்வொரு பாடத்திலும்‌ பலவிதமான தேர்வுகள்‌ நடத்தப்பட்டு விடைத் தாள்கள்‌ திருத்திக்கொடுக்கப்படும்‌. இது மாணவர்கள்‌ தங்கள்‌ தயாரிப்பின்‌ நிலையை அவ்வப்போது சுய மதிப்பீடு செய்து கொள்ள உதவும்‌.
 
'நோக்கம்‌' செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

இவ்வாறு அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரி தெரிவித்துள்ளது.

நோக்கம் செயலியைப் பதிவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.aasc.mission60 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget