மேலும் அறிய

NEET UG Result 2021: நீட் தேர்வு முடிவுகள் - தமிழ்நாடு அளவில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம்!

நாமக்கல்: நேற்று வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவர் மற்றும் மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

கரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு நாடு முழுவதும் இருந்தாலும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்படுமென கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி தேர்வு நடந்தது.

இந்தத் தேர்வை நாடு முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். ஆனால் மும்பையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கோடிங் தாள் மற்றும் புக்லெட்" இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகளும், குளறுபடிகளும் இருந்ததால், நீட் தேர்வை முறையாக எழுத முடியவில்லை. 

எனவே தங்களுக்கு மறுதேர்வு நடத்தும்வரை இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, ‘லட்சக்கணக்கானோர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழலில் இரண்டு மாணவர்களுக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது சரியல்ல’ என கூறி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டது.

NEET UG Result 2021: நீட் தேர்வு முடிவுகள் - தமிழ்நாடு அளவில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம்!

அதனையடுத்து நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அனுப்பிவைத்தது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தவர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. அதன்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவர் எம். பிரவீனும், மாணவி எஸ்.ஏ. கீதாஞ்சலியும் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். சேலத்தை சேர்ந்த அர்ஜிதா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் கீதாஞ்சலி 23ஆவது இடத்தையும், பிரவீன் 30ஆவது இடத்தையும், அர்ஜிதா 60ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: NEET UG Result Declared: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின... செப்.12ல் தேர்வு நடந்தது!

கோவை கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை

SFI Nation Wide protest Against NEET: நீட் தேர்வு மசோதா ஒப்புதல்; தேசியளவில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget