NEET UG 2023: எங்கெல்லாம் நீட் தேர்வை எழுதலாம்? வெளியிடப்பட்ட நகரங்களின் பட்டியல் - காண்பது எப்படி?
NEET UG 2023 City Allotment: 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எங்கெல்லாம் எழுதலாம் என்பதற்கான நகரங்களின் விவரம் அடங்கிய பட்டியலை என்டிஏ வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எங்கெல்லாம் எழுதலாம் என்பதற்கான நகரங்களின் விவரம் அடங்கிய பட்டியலை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதைக் காண்பது எப்படி என்று காணலாம்.
நீட் தேர்வு
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.
499 நகரங்களில் நீட் தேர்வு
2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
மத்திய, மாநில இட ஒதுக்கீடு
நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதன்படி சுமார் 4 ஆயிரம் இடங்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் நீட் தேர்வை எங்கெல்லாம் எழுதலாம் என்பதற்கான நகரங்களின் விவரம் அடங்கிய பட்டியலை என்டிஏ வெளியிட்டுள்ளது. https://ntaresults.nic.in/AdmitCard/DownloadAdmitCard/frmAuthforCity.aspx?appFormId=101042311 என்ற இணைப்பை க்ளிக் செய்து, விவரங்களை அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2023/04/2023041076.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
தொலைபேசி எண்: 011- 40759000
இ- மெயில்: neet@nta.ac.in
இணையதள முகவரி: https://neet.nta.nic.in/
இதையும் வாசிக்கலாம்: Exam Time Table: அடுத்த ஆண்டு பள்ளிகள் திறப்பு; காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வுகள் எப்போது?- முழு நாட்காட்டி இதோ!