
Exam Time Table: அடுத்த ஆண்டு பள்ளிகள் திறப்பு; காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வுகள் எப்போது?- முழு நாட்காட்டி இதோ!
2023- 24ஆம் கல்வியாண்டில் பள்ளிகள், திறப்பு, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

2023- 24ஆம் கல்வியாண்டில் பள்ளிகள், திறப்பு, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மார்ச் 18ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 8ஆம் தேதி 10ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதேபோல மார்ச் 19ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு
6 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள், பொருட்கள் தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
’’வெயில் அதிகம் இருந்தால் ஜூன் மாதத்தில் தாமதமாக பள்ளிகளைத் திறப்பது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். விடுமுறை நாட்களில் சிறுவர்களை நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். விடுமுறை நாட்களில் பெற்றோர்கள், குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்’’ என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
காலாண்டுத் தேர்வு எப்போது?
2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
டிசம்பரில் அரையாண்டுத் தேர்வு
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ஆம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. அதேபோல டிசம்பர் 13ஆம் தேதி 6 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு பள்ளி இறுதி வேலைநாளாக ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
நாட்காட்டியை முழுமையாகக் காண:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

