NEET UG 2022 Answer Key: நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நீட் தேர்வுக்கான Answer Key, OMR தாள் வெளியீடு; சரிபார்ப்பது எப்படி?
நீண்டஎதிர்பார்ப்புக்குப் பிறகு, இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் ஓஎம்ஆர் தாள்களை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது.
நீண்டஎதிர்பார்ப்புக்குப் பிறகு, இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் ஓஎம்ஆர் தாள்களை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் உள்ளிட்டவற்றுக்காக நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினர்.
இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக முதல்முறையாக நடத்தப்பட்டது. குறிப்பாக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது.
இதற்கிடையே நீட் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. இதனால் தேர்வர்கள் நேற்று முழுவதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
17.78 லட்சம் தேர்வர்களின் தகவல்களைப் பதிவேற்றுவதில் சிரமம் இருப்பதால், சற்று தாமதம் ஏற்படும் என்று என்டிஏ தெரிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் ஓஎம்ஆர் தாள்களை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் என்டிஏ அறிவித்துள்ளது.
உத்தேச விடைக் குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் தெரிவிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் ரூ.200 பணத்தைச் செலுத்தி குறிப்பிட்ட விடையை ஆட்சேபனை செய்யலாம். இந்தப் பணம் திருப்பித் தரப்படாது.
ஓஎம்ஆர் விடைத் தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் தேவைப்படும் நபர்களும் ரூ.200 பணத்தைச் செலுத்தலாம். இந்தப் பணமும் திருப்பித் தரப்படாது. தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அளித்த மெயில் ஐடிக்கும் ஓஎம்ஆர் விடைத் தாளின் ஸ்கேன் அனுப்பப்படும்.
தேர்வர்கள் இதை மேற்கொள்வது எப்படி?
* https://examinationservices.nic.in/neet2022/Root/DownloadAdmitCard.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOox7bbAmAPAy8nRVOhBfLwd என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்
* நீட் தேர்வை எழுதியவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
* Download answer key என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும்.
* NEET UG 2022 answer key என்ற பெயரில் பிடிஎஃப் விடைக்குறிப்பு தோன்றும்.
* அதைத் தரவிறக்கம் செய்து, பிற்காலப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.