மேலும் அறிய

EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை

நாட்டில் முதல்முறையாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு வினாத்தாள் மாறி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். இதில் 12,730 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்னப்பித்து இருந்தனர்.  

இந்த நிலையில், வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என்று செய்திகள் ஆண்டுதோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், முதல்முறையாக தமிழ்நாட்டில், வினாத்தாள் மாறி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்கள், நீட் தேர்வு மையங்களாக செயல்பட்டன. குறிப்பாக அழகர் பள்ளி, கமலாவதி பள்ளி, சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆகியவை நீட் தேர்வு மையங்களாகச் செயல்பட்டன.

நீட் தேர்வு குளறுபடி

இந்த நிலையில், அழகர் பள்ளி மற்றும் கமலாவதி பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் மாறியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும் 200 கேள்விகளும் முற்றிலுமாக மாற்றி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 தேர்வு மையங்களிலும் சுமார் 1500 மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வினாத்தாள் m, n, o, p என்ற கோடுகளைக் கொண்டுள்ளது. எனினும் மற்ற மையங்களில் வழங்கப்பட்ட சரியான வினாத்தாள்களுக்கு தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் q, r, s, t ஆகிய கோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதைப் பார்த்த மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அழகர் பள்ளியில் நீட் தேர்வெழுதிய பேச்சியம்மாள் என்னும் மாணவி ABP நாடுவிடம் பேசினார்.

''எங்களுக்கு அளிக்கப்பட்ட 200 கேள்விகளும் முழுமையாக மாறி உள்ளது. தேர்வு முடித்து வீட்டுக்கு வந்ததும், இணையத்தில் ஆன்சர் கீ-யை சோதித்துப் பார்த்தேன். ஆனால் எங்கள் வினாத்தாள் தொடர்பான விடைகள் எதுவும் இல்லை.

ஜேஇஇ தேர்வு போல, கேள்வித் தாள்கள் மாறிவிட்டதோ என்று நினைத்து, சிறிது நேரம் கழித்து சோதிக்க முடிவு செய்தேன். நள்ளிரவிலும் பரிசோதித்துப் பார்த்தோம். அடுத்த நாள் மாலை வரை இப்படியே பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகுதான் வினாத்தாள் மாறியது தெரிந்தது. உடனே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. மாவட்டக் கல்வி அலுவலகத்தில் கேட்டால், மத்திய அரசின் தேர்வு, நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள்.

EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை

என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அரசு எங்களின் விடைத்தாள்களையும் திருத்த வேண்டும். தனித்தனி கட் –ஆப் அளித்து, கலந்தாய்வு நடத்த வேண்டும். இல்லாவிட்டால், இந்தியா முழுவதும் மறு தேர்வு வைக்க வேண்டும்.

அது உண்மையில் சாத்தியமா?

அது எங்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் என்ன தவறு செய்தோம்? கேள்வித் தாள் மாறியதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அரசு எங்களுக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டும்''.

இவ்வாறு மாணவி பேச்சியம்மாள் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் கட்டாயம் மறுதேர்வு நடத்த வேண்டும். ஏனெனில் ஒருவருக்கு நீதி மறுக்கப்பட்டாலும் அது தவறுதான் என்கிறார் கல்வி ஆலோசகர் அஸ்வின். இதுகுறித்து ஏபிபி நாடுவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நீட் நுழைவுத் தேர்வு லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு. 11, 12ஆம் வகுப்பு மட்டுமல்லாது, மீண்டும் சில ஆண்டுகள், தங்கள் உழைப்பைக் கொட்டி மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகின்றனர்.

ஒரு தேர்வின் அடிப்படையே வினாத்தாள்தான். அதிலேயே பிரச்சினை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?  தூத்துக்குடியில் மட்டும் இரண்டு தேர்வு மையங்களுக்கும் எங்கிருந்து வினாத்தாள்கள் வந்தன? அவற்றைக் கொடுத்தது யார்? யார் வேண்டுமானாலும் கேள்வித் தாளைப் பார்க்கவோ, மாற்றவோ முடியுமா? இதன்மூலம் வினாத்தாள் கசிவு நடக்கிறதா? இதற்கு தேசியத் தேர்வுகள் முகமையின் பதில் என்ன? இதன் மெத்தனப் போக்கு கண்டத்துக்குரியது. 

ஜேஇஇ தேர்வு முறையை அறிமுகம் செய்க!

20 லட்சம் மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு என்பது நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தலாம். அதற்கு, ஜேஇஇ தேர்வு போல, நீட் தேர்வையும் 6, 7 நாட்களுக்கு நடத்தலாம். ஒவ்வொரு நாளுக்கும் வெவ்வேறு கேள்விகளை அறிமுகம் செய்யலாம். அவற்றுக்கு பர்சண்டைல் முறையை அறிமுகப்படுத்தலாம்.

EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை

இம்முறை என்ன செய்யலாம்?

இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வு வைக்க வேண்டும். இது கடினம்தான். ஆனாலும் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் சம மதிப்பெண்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஏனெனில் வினாத்தாள் மாறிய இரு தேர்வு மையங்களுக்கு மட்டும் மறு தேர்வு வைக்கப்பட்டால், வினாத்தாளின் கடினத் தன்மையை எப்படி அளவீடு செய்ய முடியும்?  மே 5ஆம் தேதி நடந்த தேர்வின் வினாத்தாளும் மறுதேர்வு வினாத்தாளும் ஒரே மாதிரியாக இருக்காதே. அதனால் மறுதேர்வு ஒன்றுதான் ஒரே வழி. நீதிமன்றத்தை அணுகினாலும் தாமதம் மட்டுமே ஆகும்’’.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

நடுரோட்டில் நிற்பதுபோல உணர்கிறேன்....

நீட் தேர்வில் வினாத்தாள் மாறிய மாணவியின் தாய் சந்தனம் நம்மிடம் பேசும்போது, ''கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தேன். எம்பிபிஎஸ் கிடைக்காவிட்டால், சித்தா, ஹோமியோபதியாவது கிடைக்கும். பிள்ளையைக் கரைசேர்த்து விடலாம் என்று நினைத்தேன். இப்போது நடுரோட்டில் நிற்பதுபோல உணர்கிறேன்.

நாம்தான் இப்படி இருக்கிறோம். பிள்ளையாவது படித்து முன்னேறட்டும் என்று ஆசைப்பட்டோம். மாறிய வினாத்தாளால் அதுவும் நிராசையாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது'' என்கிறார் பானிபூரி விற்கும் சந்தனம்.

நீட் தேர்வு முறை குறித்தே பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்கும் நிலையில், தேர்விலும் குளறுபடி என்பது மாணவர்களையும் பெற்றோர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதற்கு தேசியத் தேர்வுகள் முகமை உரிய பதிலளிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!
Ajith in Next Race; அசத்தும் அஜித் குமார்;  அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
அசத்தும் அஜித் குமார்; அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
Rangoli Kolam: பக்தர்களே! வாசலில் இனிமேல் இந்த முருகன் ரங்கோலி கோலங்களை போடுங்க!
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
Embed widget