மேலும் அறிய

Cyclone Michaung : மிக்ஜாம் புயல் எதிரொலி : விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மிக்ஜாம் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று நேற்று புயலாக மாறியது. இதற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 150 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் தேதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பழனி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் விழுப்புரம் மாவட்டமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக்ஜாம் புயல் 

வங்க கடல் பகுதியில் கடந்த 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது அதற்கடுத்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாகவும் வலுவடைந்துவிட்டது. இதற்கு மிக்ஜாம் என என்று பெயரிட்டு இருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் இந்த மிக்ஜாம் புயல் மேலும் தீவிரம் அடைகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தமிழ்நாட்டில் சென்னை உள்பட வட கடலோரப் பகுதிகளில் நெருங்கி நிலவக்கூடும்.

அதன் பின்னர், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தெற்கு ஆந்திரா கடற்கரையையொட்டி நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும். அந்த நேரத்தில் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த புயல் தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்பதால், அந்த பகுதிகளில் மழை மற்றும் காற்றுக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. இதுதவிர, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மழையைப் போலவே சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) தரைக்காற்று மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அதனைத் தொடர்ந்து நாளை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வங்கக்கடலில் வலுப்பெற்ற மிக்ஜாம்  புயல் இன்று அதிகாலை 2.15 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே - தென் கிழக்கே 150 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்தது.இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை புயலாக வட தமிழக கடலோரப் பகுதிகளை கடந்து, மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளையதினம் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் தீவிர புயலாக நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget