மேலும் அறிய

Uber Cool : புதுசு புதுசா வார்த்த கண்டுபிடிக்கிறாங்க...இந்த ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா சார்?

சமூக வலைதளங்களில் சமீப காலங்களில் அதிக புழக்கத்தில் இருக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களைப் பார்க்கலாம்

புதிது புதிதாக ஆங்கில வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதே நெட்டிசன்களுக்கு பழக்கமாகிவிட்டது. சரி நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கலாம் என்றால் நாட்கள் செல்ல செல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கி விடுகிறார்கள். சரி தெரிந்துகொள்ளலாம் என்று கேட்டால் ‘இந்த வார்த்தை தெரியாதா, பூமர் என்று பட்டம் கொடுத்து விடுகிறார்கள்.

அப்படி சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிக புழக்கத்தில் இருக்கும் சில ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த வார்த்தைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்கிற நிர்பந்தம் யாருக்கும் இல்லை. இன்னொருவர் பேசும்போது புரிந்துகொள்வதற்காக மட்டுமே கூட இதை  நான் தெரிந்து கொள்ளலாம்

ஊபர் கூல்  - Uber Cool

சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்தப் படும் ஒரு வார்த்தை ஊபர் கூல். ஊபர் என்பது கார் அதென்ன ஊபர் கூல் என்று எனக்குத் தோன்றியது போல் உங்களுக்கும் தோன்றினால் நாம் எல்லாரும் ஒரே இனம் என்று அர்த்தம். ஊபர் என்கிற சொல்லுக்கு ஜெர்மானிய மொழியில் அதீதம் அல்லது அதிகம் என்று பொருள். ஒருவர் மிக நிதானமாக எந்த விதமான சூழலிலும் தனது பொறுமையை இழக்காமல் இருக்கிறார் என்றால் அவரை கூல் என்கிறோம். இதே போல் எப்படியான ஒரு மோசமான நிலைமையிலும்  பயப்படாமல் பதறாமல் நிதானமாக இருக்கிறார் என்றால் அவரை ஊபர் கூல் என்கிறோம். உதாரணத்திற்கு கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி (பிளாஷ்பேக் சூரியா) சொல்லலாம்.

ஃப்ரெனிமி - Frenemy

பேரிலேயே இருப்பது போல் நண்பரும் எதிரியும் சேர்ந்தது தான் ஃப்ரெனிமி. அது எப்படி ஒரே நேரத்தில் நண்பர்களாகவும் எதிரிகளாகவும் இருக்க முடியும். வெளி உலகத்தில் பார்ப்பதற்கு இரண்டு நபர்கள் நெருக்கமான நண்பர்களாகவும் ஆனால் இருவரது மனதிற்குள்ளும் தீராத பகையுணர்வும் இருக்கும். வடசென்னையில் தனுஷ் மற்றும் சமுத்திரகனியின் கதாபாத்திரம்.

மீ டைம் - Me Time

 சிலருக்கு தனியாக இருப்பது பிடிக்கும். சிலருக்கு எப்போது தன்னைச் சுற்றி எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அப்படியானவர்களுக்கே கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் போதும் என்கிற உணர்வு அவ்வப்போது வரும். எல்லா நண்பர்கள் குடும்பத்தினர் இவர்களுக்காக இவர்களுடன் இருந்துவிட்டு நமக்காக நமக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்வதுநான் மீ டைம். விட்டத்தைப் பார்த்து தூங்கினாலும் பையை மாட்டிக் கொண்டு மலையேறினாலும் அது உங்கள் ஒருவருடைய திருப்திக்காக மட்டுமே செய்கிறீர்கள் என்றால் அதுதான் மீ டைம்.

பெப் டாக் - Pep Talk

ஒரு பரீட்சைக்கு முன்போ அல்லது ஒரு விளையாட்டு போட்டிக்கு முன்போ எப்போது நமக்கு கொஞ்சம் தைரியம் கொடுக்க யாராவது ஒருத்தர் இருப்பார்கள் இல்லையா. லாஜிக் இல்லாவிட்டாலும் கூட நமது நண்பர்கள் கொடுத்த மோடிவேஷனை கேட்டுவிட்டு எத்தனை கலவரங்களில் இறங்கியிருப்போம். கமல் சொல்வது போல் இந்த மாதிரி நேரங்களில் வீரன்கள் சொல்லும் வார்த்தை பாத்துக்கலாம். அதை தான் பெப் டாக் என்று சொல்லுகிறோம். பெப் என்கிற வார்த்தையின் முழு வடிவம் பெப்பர்.. அதாவது மிளகு. இயல்பாகவே ஊக்கமளிக்கும் திறன் மிளகில் இருப்பதால் பெப் டாக் என்று பெயர் வைத்துள்ளோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget