மேலும் அறிய

ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!

ஐஐடி நுழைவுத்தேர்வில் தோல்வியைத் தழுவி, வெறும் 20,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இன்று துபாயில் முன்னணி நிறுவனத்தின் பிசினஸ் லீடராக உயர்ந்து வியக்க வைத்துள்ளார்.

இந்தியாவில் ஐஐடி போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் சேர முடியாவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என விரக்தியடையும் மாணவர்களுக்கு மத்தியில், விடாமுயற்சியால் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் சௌரவ் ஜெயின்.

இரண்டு முறை ஐஐடி நுழைவுத்தேர்வில் தோல்வியைத் தழுவி, வெறும் 20,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இன்று துபாயில் முன்னணி நிறுவனத்தின் பிசினஸ் லீடராக உயர்ந்து வியக்க வைத்துள்ளார்.

தோல்வியும், தொடக்கமும்

பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சௌரவ், பல இந்திய மாணவர்களைப் போலவே ஐஐடியில் சேர கடுமையாகப் படித்து ஜேஇஇ தேர்வை எழுதினார். ஆனால், தொடர்ந்து இரண்டு முறை அந்த நுழைவுத்தேர்வில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

இந்தத் தோல்வி அவரை மனதளவில் கடுமையாகப் பாதித்தது. எனினும், அந்த விரக்தியிலேயே முடங்கிவிடாமல், ஒரு சாதாரண டயர் 3 பொறியியல் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். ஐஐடி என்ற முத்திரை தன்னிடம் இல்லை என்றாலும், திறமையை வளர்ப்பதில் அவர் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். பணத்துக்கு கஷ்டம் ஏற்பட்ட போதும் ட்யூஷன் எடுத்துச் சமாளித்தார்.

முதல் பணியும், வளர்ச்சியும்

கல்லூரிப் படிப்பை முடித்ததும், அவர் ஒரு சாதாரண மென்பொருள் பொறியாளராக வெறும் ரூ.20,000 மாதச் சம்பளத்தில் தனது முதல் பணியைத் தொடங்கினார். ஆரம்பக்கட்ட சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும், தனது உழைப்பில் அவர் எவ்வித சமரசமும் செய்துகொள்ளவில்லை.

புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்வது மற்றும் அயராத உழைப்பு ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தில் படிப்படியாக தனது திறனை நிரூபித்தார். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்தியக் கற்றல் ஆகியவற்றை தன்னிச்சையாகவே கற்றார். அவரது இந்த அர்ப்பணிப்பு அவரை கார்ப்பரேட் உலகில் வேகமாக முன்னேற்றியது.

ஒரு மேலாளரிடம் ஏஐ தொடர்பான புராஜெக்டைக் கேட்டுப் பெற்றார். அதில் அவர் பெற்ற வெற்றி, அடுத்தடுத்த நிலைக்கு அவரை உயர்த்தியது.

துபாயில் மாபெரும் வெற்றி

ரூ.20 ஆயிரத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய சௌரவ் ஜெயின், இன்று துபாயில் உள்ள ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் மிக முக்கிய வணிகப் பிரிவை (Business Portfolio) வழிநடத்தும் உயர்மட்டத் தலைவராக உருவெடுத்துள்ளார்.

நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது படிக்கும் கல்லூரி மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதை தனது வாழ்க்கையின் மூலம் அவர் நிரூபித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
Embed widget