மேலும் அறிய

அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்குக; 99% ஆசிரியர்கள் காலியிடங்கள் ஏன்?- அன்புமணி

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும்  விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’தமிழ்நாட்டில் விளையாட்டை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்  எழுந்துள்ள நிலையில், பள்ளிகளில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில்  தொடக்கப் பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் இல்லை; விளையாட்டை கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் 7 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தாலும், அவற்றில் 80 பணியிடங்கள் மட்டும்தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள  99% பணியிடங்கள் காலியாகவே உள்ளன. உயர்நிலைப் பள்ளிகளில் 6000 உடற்கல்வி ஆசிரியர் காலி இடங்களில் 2000 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

விளையாட்டுத் திடல்களே இல்லை

அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு இரு பாட வேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த பாடவேளைகளில் விளையாட்டு கற்பிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  பெரும்பான்மையான பள்ளிக்கூடங்களில் விளையாட்டுத் திடல்களே இல்லை. சில பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள் இருந்தாலும் வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அரசு பள்ளிகள் இருந்தால், அவற்றில் விளையாட்டுகளை எவ்வாறு வளர்த்தெடுக்க முடியும்?

இவை ஒருபுறமிருக்க தமிழ்நாட்டு கல்விச்சூழலில்  இன்னொரு புதிய கலாச்சாரம் தோன்றியிருக்கிறது. விளையாட்டுத்திடல்களும், விளையாட்டுப் பாடமும் இல்லாத பள்ளிக்கூடங்களை தொழில்நுட்பப் பள்ளிகள் என்ற பெயரில் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்விக் குழுமங்கள் தொடங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு எந்த தடையும் இல்லாமல் தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு எதிரான நோக்கம் கொண்ட பள்ளிகளை அனுமதிக்கக்கூடாது.

7  விளையாட்டுக்கான கட்டமைப்பு

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் குறைந்தது  7  விளையாட்டுக்கான கட்டமைப்புகளுடன் விளையாட்டுத் திடல்கள்  ஏற்படுத்தப்படுவதை  அரசு உறுதி செய்ய வேண்டும்.  ஆண்டுதோறும் பள்ளிகளிலும்,  கல்லூரிகளிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும்,  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுவதை  தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Quarterly Exam Holidays: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?

தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு

ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Quarterly Exam Holidays: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Quarterly Exam Holidays: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு
தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு
Salem Leopard: 10 சிறுத்தை குட்டிகளை தமிழக எல்லையில் விட்டுச் சென்ற கர்நாடகா வனத்துறையினர்? சேலத்தில் பரபரப்பு

இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்

Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...

RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!

Embed widget